பொழுதுபோக்கு

இந்த சஸ்பென்ஸ் திரில்லருக்கு ஓ.டி.டி-யில் அதிக எதிர்பார்ப்பு: வேடுவன் ரிலீஸ் அறிவிப்பு!

Published

on

இந்த சஸ்பென்ஸ் திரில்லருக்கு ஓ.டி.டி-யில் அதிக எதிர்பார்ப்பு: வேடுவன் ரிலீஸ் அறிவிப்பு!

இயக்குநர் பவன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் ‘வேடுவன்’. இந்த வெப் தொடரில் கண்ணா ரவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இதில் சஞ்சீவ் வெங்கட், ஸ்ரவ்நிதா ஸ்ரீகாந்த், ரம்யா ராமகிருஷ்ணா, ரேகா நாயர் ஆகியோர் முaக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ரைஸ் ஈஸ்ட் நிறுவனத்தின் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில் உருவாகியுள்ளது ‘வேடுவன்’ வெப் தொடருக்கு விபின் பாஸ்கர் இசையமைத்துள்ளார். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த வெப் தொடர் வரும் 10-ஆம் தேதி முதல் ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த வெப்தொடரில் மொத்தன் 10 எபிசோடுகள் உள்ளது. ஒவ்வொரு எபிசோடும் 30 முதல் 40 நிமிடங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் ’வேடுவன்’ வெப் தொடரின் டிரைலர் படக்குழுவால் வெளியிடப்பட்டது.அதன்படி, எண்கவுண்டர் ஸ்பெசலிஸ்டான கண்ணா ரவி, வில்லன் சஞ்சீவை கொல்வதற்காக அவரது ஊருக்கு சொல்கிறார். அங்கு பார்த்தால் தன் கல்லூரி தோழியின் கணவராக சஞ்சீவ் இருக்கிறார். இதனால் குழப்பமடைந்த கண்ணா ரவி என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கிறார்.இவ்வாறு அந்த டிரைலர் உள்ளது. டிரைலரை பொறுத்த வரை காட்சிகள் விறுவிறுப்பாக உள்ளது. சைகாலஜிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ள ‘வேடுவன்’ வெப் தொடரை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.நடிகர் கண்ணா ரவி சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படத்தில் நாகார்ஜுனாவின் மகனாக நடித்திருந்தார். அப்படத்தில் இவரின் நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது.நடிகர் கண்ணா ரவி ‘வீரா’, ‘கைதி’, ‘மண்டேலா’, ‘சாணிக்காயிதம்’, ‘ரத்த சாட்சி’, ‘கூலி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version