இலங்கை

உலக செல்வந்தர் பட்டியலுக்குள் இடம்பிடித்த ஷாருக்கான்

Published

on

உலக செல்வந்தர் பட்டியலுக்குள் இடம்பிடித்த ஷாருக்கான்

பொலிவுட் நடிகரான ஷாருக்கான் தற்போது அதிகாரப்பூர்வமாக பில்லியனர் பட்டியலில் இணைந்துள்ளார்.

33 ஆண்டுகால திரைப்படப் பயணத்திற்குப் பிறகு, அவரது மொத்த சொத்து மதிப்பு 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் என Hurun India Rich List 2025 வெளியிட்டுள்ளது.

Advertisement

இந்தியாவின் மிகச் செல்வந்த நடிகராக தொடர்ந்தும் இருக்கும் ஷாருக்கான், உலகளாவிய தரவரிசையிலும் பல நிலைகள் முன்னோக்கிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், ரூ.12,490 கோடி சொத்துக்களுடன் முதன்முறையாக பில்லியனர் பட்டியலில் இணைந்துள்ளார், என அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷாருக்கான் தற்போது பல சர்வதேச பிரபலங்களை விட செல்வந்தராகியுள்ளார்.

Advertisement

அதில் டெய்லர் ஸ்விஃப்ட் (Taylor Swift )1.3 பில்லியன் டொலர், அர்னால்ட் ஷ்வார்ஸ்னேக்கர்(Arnold Schwarzenegger)( 1.2 பில்லியன் டொலர்), ஜெரி சைன்பீல்ட்(erry Seinfeld ) (1.2 பில்லியன் டொலர்) மற்றும் செலீனா கோமேஸ்(Selena Gomez) (720 மில்லியன் டொலர்) ஆகியோர் அடங்குவர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version