பொழுதுபோக்கு
எங்க லவ் தொடங்கியது இப்படித்தான்… ஆனா முதல்ல சொன்னது: சீரியல் நடிகை வைஷ்ணவி சுந்தர் பேட்டி
எங்க லவ் தொடங்கியது இப்படித்தான்… ஆனா முதல்ல சொன்னது: சீரியல் நடிகை வைஷ்ணவி சுந்தர் பேட்டி
வெள்ளித்திரைப் போல் சின்னத்திரையிலும் காதல் செய்து திருமணம் செய்து கொள்பவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஏற்கனவே செந்தில் – ஸ்ரீஜா, சேத்தன் – தேவதர்ஷினி, சஞ்சீவ் – ஆலியா மானசா, சித்து – ஸ்ரேயா ஆகியோர் சீரியல்களில் நடித்து பின்னர் காதல் திருமணம் செய்துகொண்டனர்.இந்த வரிசையில், அடுத்ததாக இணைந்தது வெற்றி வசந்த் – வைஷ்ணவி சுந்தர் ஜோடி தான். பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘பொன்னி’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் வைஷ்ணவி சுந்தர்.இதேபோன்று அதே தொலைக்காட்சியில் சக்கைபோடு போட்டு வரும் ’சிறக்கடிக்க ஆசை’ தொடரில் வெற்றி வசந்த் கதாநாயகனாக நடித்து வருகிறார். வெற்றி வசந்த் – வைஷ்ணவி சுந்தர் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் காதலில் விழுந்தனர்.இவர்கள் திருமணத்திற்கு முன்பு வரை இருவரும் காதல் செய்வது யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டனர். இருவீட்டாரும் சம்மதித்த பிறகே சமூக வலைதளங்களில் இருவரும் காதலிப்பதாக தெரிவித்தனர்.இதையடுத்து வெற்றி வசந்த் – வைஷ்ணவி சுந்தர் இருவருக்கும் கடந்த ஆண்டு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நடிகை வைஷ்ணவி தனது காதல் கதையை பற்றி நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.அவர் பேசியதாவது, ”முதலில் மெசேஜ் மூலமாக தான் பேசினோம். இவர் விஜய் டிவி-யில் நடிக்க போகிறார் என்பது கூட எனக்கு தெரியாது. சீரியலின் புரொமோ பார்த்துவிட்டு வாழ்த்து தெரிவித்து மெசேஜ் அனுபினேன். அதன் பின்னர் தான் நன்றாக் பேச ஆரம்பித்தோம்.அதன் பிறகு இருவரும் பார்த்து பேசி கொஞ்சம் நேரம் செலவிட்டோம். என் நண்பர்களுடன் வெற்றி ரொம்ப நன்றாக பழக ஆரம்பித்தார். அதன்பிறகு, எனக்கு சீரியல் தொடங்கியது. பேசுவதற்கு அதிகம் நேரம் இல்லை. எப்போது பேசுகிறோமோ அப்போது என்ன நடந்ததோ எல்லாவற்றையும் கொட்டி தீர்த்துவிடுவேன். அதன்பின்னர், ஒரு வருடத்திற்கு முன்பு தான் என்னை பிடித்திருப்பதாக கூறினார். உனக்கும் என்னை பிடித்திருந்தால் சொல்லு திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். அதன்பிறகு, ரொம்ப நல்ல நண்பர்களாக இருந்தோம் ஒரு நாள் என்னிடம் அவரை பிடித்திருகிறதா? என்று கேட்டார்.ஆமாம் என்று சொன்னதும் இருவீட்டாரும் பேசி திருமணம் நடைபெற்றது. எந்த சூழ்நிலையாக இருந்தாலும் நான் இருக்கிறேன் என்பார்” என்றார்.