பொழுதுபோக்கு

கமல் ஃபேன்ஸ் ரெடியா? ரீ-ரிலீஸ் ஆகும் ‛நாயகன்’… எப்போது தெரியுமா?

Published

on

கமல் ஃபேன்ஸ் ரெடியா? ரீ-ரிலீஸ் ஆகும் ‛நாயகன்’… எப்போது தெரியுமா?

தமிழ் திரையுலகில் பல தசாப்தங்களாக தனது நடிப்பால் கோலோச்சி நிற்பவர் கமல்ஹாசன். உலக நாயகன் என ரசிகர்களால் அழைக்கப்படும் கமல்ஹாசன் எவர்கீரின் படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் உள்ளார்.ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் பல படங்களை தயாரித்துள்ளார். எப்போதும் கமல் – மணிரத்னம் காம்போ ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கக் கூடிய ஒரு காம்போவாகும். சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியானது.இப்படத்தில் சிம்பு, திரிஷா, அபிராமி உட்பட பலர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி வரவேற்பை பெறும் என்று நினைத்த நிலையில் கலவையான விமர்சனத்தை பெற்றது. எப்போது மணிரத்னம் ‘நாயகன்’ போன்று ஒரு படத்தை எடுப்பார் என்று ரசிகர்கள் இன்றும் காத்திருக்கின்றனர்.கடந்த 1987-ஆன் ஆண்டு இயக்குநர் மணிரத்னம்  இயக்கத்தில் கமல் நடிப்பில்  வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தான் ‛நாயகன்’. மும்பையில் வாழ்ந்த தமிழகத்தை சேர்ந்த வரதராஜன் முதலியார் வாழ்க்கையை தழுவி இப்படம் உருவாகி இருந்தது. மும்பையில் தமிழ் டானாக வேலு நாயக்கராக கமல் நடித்திருந்தார். அவருடன் சரண்யா, ஜனகராஜ், டெல்லி கணேஷ், நாசர், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‛தென்பாண்டி சீமையில’, ’நீ ஒரு காதல் சங்கீதம்’ உள்ளிட்ட பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. இன்றும் ரசிகர்கள் விரும்பி கேட்கும் பாடலாக இந்த பாடல்கள் உள்ளது.  கமலுக்கு சிறந்த நடிகர், பிசி ஸ்ரீராமுக்கு சிறந்த ஒளிப்பதிவு, தோட்டா தரணிக்கு சிறந்த கலை என இந்த படத்திற்கு மொத்தம் 3 தேசிய விருதுகள் கிடைத்தன. தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக கொண்டாடப்படும் ’நாயகன்’ திரைப்படம் 38 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸாகவுள்ளது . இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றபடி டிஜிட்டல் தொழில் நுட்பத்தில்  படத்தை மெருகேற்றி வருகிறது படக்குழுநடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படம் தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 6-ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இப்படத்தின் மறு வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version