சினிமா

‘காந்தாரா: சாப்டர் 1’ படம் எப்படி? முதல் விமர்சனம் இதோ..

Published

on

‘காந்தாரா: சாப்டர் 1’ படம் எப்படி? முதல் விமர்சனம் இதோ..

இந்தியா முழுதும்  அதிக எதிர்பார்ப்புடன் காணப்படும் படம் தான் காந்தாரா: சாப்டர் 1. இந்த படம் தெலுங்கில் 100 கோடி ரூபாய்க்கு  வியாபாரம் ஆகியுள்ளது காந்தாரா படத்தின் முதல் பாகம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.  இதன் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவானது.  இந்த படப்பிடிப்பின் போது பலர்  விபத்துகளில் சிக்கி உயிரிழந்தனர் .  இந்த படத்தின் நாயகனான  ரிஷப் செட்டி கூட விபத்தில் சிக்கினார். இந்த படத்திற்கு சென்சார் குழு  U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.  படத்தின் நீளம் 2 மணி 48 நிமிடங்கள்  என கூறப்படுகின்றது. இந்தப் படத்தில் பழங்குடி மக்களின் வாழ்க்கை,  பூதகோலத் திருவிழா ஆகியவை முக்கியமாக காணப்படுகின்றன. இந்த நிலையில், ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தின்  முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது. இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வெளிநாட்டு விமர்சகர் உமைர் சந்து ‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல,  இது மிகையாக மதிப்பிடப்பட்ட ஒரு விசித்திரமான படம்’ என 2 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. உமைர் சந்துவின்  விமர்சனங்கள் பெரும்பாலும் உண்மையாகவே காணப்படுகின்றன.  காந்தாரா போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு.  எனவே நாளை படம் வெளியானதும்  எவ்வாறான விமர்சனங்கள் கிடைக்கின்றன என்பதை பார்ப்போம். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version