சினிமா

சிந்தாமணிக்கு ரோகிணி போட்ட கண்டிஷன்.? மீனாவை நெருங்கும் புதிய பிரச்சினை

Published

on

சிந்தாமணிக்கு ரோகிணி போட்ட கண்டிஷன்.? மீனாவை நெருங்கும் புதிய பிரச்சினை

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  க்ரிஷ்  அம்மாவுடைய  போன் நம்பரை வாங்கி தருமாறு மீனா வித்யாவிடம் கேட்கின்றார். அதன் பின்பு தனது திருமண பத்திரிக்கையை வித்யா மகேஸ்வரிக்கு கொடுக்கின்றார். அப்போது ரோகிணி அங்கு வரவும், மீனா உன்னுடைய நம்பரை கேட்டதாக சொல்ல ,  ரோகிணி கோபமடைகிறார்.  மேலும் இந்த விஷயத்தில் தன்னால் பொய் சொல்ல முடியாது என்று வித்யா சொல்லுகிறார்.இதனால் துபாயில் உள்ள ஒருவரின் நம்பரை எடுத்து மீனாவுடன் கதைக்க வைக்க ரோகிணி பிளான் போடுகின்றார்.அதே நேரத்தில் வித்யாவையும் நம்ப முடியாது உண்மையை சொல்லிவிடுவார் என்று மகேஸ்வரியுடன் பேசிக் கொண்டுள்ளார்.இதை தொடர்ந்து முத்துவும் மீனாவும் உண்டியலில்  காசு போடுகின்றார்கள்.  கூடிய விரைவில்  மேலே ரூம் கட்ட வேண்டும் என  பேசிக் கொள்கின்றார்கள்.  அந்த நேரத்தில்  க்ரிஷ் அம்மாவுடைய  போன் நம்பரை கேட்டதாக முத்துவிடம் மீனா சொல்லிக் கொண்டிருக்கின்றார். மேலும்  அம்மாவினுடைய கடைக்கு அருகில் ஒரு போர்டு வைக்க வேண்டும்  , அப்போ நிறைய ஆடர் வரும் என்று பேசிக்கொண்டு இருக்கின்றார். இதனை ரோகிணி  மறைந்திருந்து கேட்கின்றார் அதன் பின்பு மனோஜ் மேக்கப் ஆர்டர் ஒன்று வந்திருப்பதாகவும் பூ டெக்ரேசன் ஆர்டர் என்று வந்திருப்பதாகவும் சொல்ல, அதனை மீனாவுக்கு கொடுக்க வேண்டாம் என்று சொல்லுகிறார்.இறுதியில்  சிந்தாமணிக்கு அந்த ஆர்டரை தருவதாகவும் ஆனால் அதற்கு பதிலாக கோவில் வாசலில் உள்ள மீனாவின் அம்மாவுடைய பூக்கடையை தூக்குமாறு சிந்தாமணிக்கு சொல்லுகின்றார் ரோகிணி. இதுதான் இன்றைய எபிசோட். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version