இலங்கை
சிவகுரு ஆதீனத்தில் ஏடு தொடக்குதல்
சிவகுரு ஆதீனத்தில் ஏடு தொடக்குதல்
692, பருத்தித்துறை வீதி, நல்லூரிலுள்ள சிவகுரு ஆதீனத்தில் விஜயதசமி தினமான நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளால் ஏடு தொடக்கப்படவுள்ளது.
அத்துடன் சிறுவர் வகுப்பு மற்றும் ஆன்மிக வகுப்புகளுக்கு புதிய மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர். தங்கள் பிள்ளைகளுக்கு ஏடு தொடக்க விரும்புவோர் மற்றும் வகுப்புகளில் இணையவிரும்புவோர் 077 222 0103 எனும் ஆதீன அலுவலக இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.