விளையாட்டு
சென்னையில் வெற்றியுடன் தொடங்குமா தமிழ் தலைவாஸ்? யு -மும்பா அணியுடன் இன்று மோதல்
சென்னையில் வெற்றியுடன் தொடங்குமா தமிழ் தலைவாஸ்? யு -மும்பா அணியுடன் இன்று மோதல்
12 அணிகள் களமாடி வரும் 12-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புரோ கபடி லீக் தொடரில் இன்று புதன்கிழமை இரவு 9 மணிக்கு சென்னையில் உள்ள எஸ்.டி.ஏ.டி பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் 58-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் யு – மும்பா அணிகள் மோதுகின்றன. நடப்பு தொடரில் அர்ஜுன் தேஷ்வால் தலைமையிலான தமிழ் தலைவாஸ் இதுவரை 9 போட்டிகளில் ஆடி 4-ல் வெற்றி 5-ல் தோல்வி என புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கிறது. மறுபுறம், சுனில் குமார் தலைமையிலான யு மும்பா 9 போட்டிகளில் ஆடி 4-ல் வெற்றி 5-ல் தோல்வி என புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறது. புள்ளிப் பட்டியலில் பின்தங்கி இருக்கும் இரு அணிகளும் மேலே முன்னேற கடுமையாக போராடும். ஜெய்ப்பூரில் வெற்றியுடன் நிறைவு செய்த தமிழ் தலைவாஸ் சொந்த மண்ணில் அதே உத்வேகத்தில் ஆட நினைக்கும். எனவே இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. நேருக்கு நேர் புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் யு – மும்பா அணிகள் இதுவரை 14 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 10 போட்டிகளில் யு-மும்பா அணியும், 4 போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும் வென்றுள்ளன. 1 போட்டி சமனில் முடிந்தது.