இலங்கை

செம்மணியில் மூன்றாம்கட்ட அகழ்வு; பட்ஜெட்டின் நகர்வு தொடர்பில் நீதிமன்றில் இன்று விசாரணை!

Published

on

செம்மணியில் மூன்றாம்கட்ட அகழ்வு; பட்ஜெட்டின் நகர்வு தொடர்பில் நீதிமன்றில் இன்று விசாரணை!

அரியாலைய செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று இடம்பெறவுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான பட்ஜெட் நகர்வு தொடர்பில் இன்று ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம்கட்ட அகழ்வுப் பணிகள் செப்ரெம்பர் மாதம் 6ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளன. இதுவரை 240 என்புத்தொகுதிகள் அவதானிக்கப்பட்ட நிலையில், அவற்றில் 239 என்புத்தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.

Advertisement

மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், கடந்த தடவை வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்டபோது, மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகளுக்கான பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. பட்ஜெட் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் மூன்றாம் கட்ட வழக்கு விசாரணைகளை ஒக்ரோபர் மாதம் 21ஆம் திகதி ஆரம்பிக்கலாம் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பட்ஜெட் தொடர்பான நகர்வுகள் தொடர்பில் ஆராய்வதற்காக வழக்கு இன்றைய தினத்துக்குத் தவணையிடப்பட்டது. இவ்வாறான பின்னணியிலேயே, இன்றைய வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்றன. எனவே, ஒக்ரோபர் மாதம் 21ஆம் திகதி அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்குமா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று ஓரளவுக்குத் தெரியவரும் என்று கருதப்படுகின்றது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version