இலங்கை

தமிழர் பகுதியில் வங்கிக்கு சென்ற குடும்ப பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் ; கைவரிசையை காட்டி மாயமான இளைஞன்

Published

on

தமிழர் பகுதியில் வங்கிக்கு சென்ற குடும்ப பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் ; கைவரிசையை காட்டி மாயமான இளைஞன்

வங்கியொன்றின் பண வைப்பு இயந்திரத்தில், பெண்ணொருவரின் பணத்தை வங்கிக்கணக்கொன்றுக்கு வைப்பிலிட உதவி செய்வது போல் வந்த இளைஞன், அந்தப் பணத்தை தனது வங்கிக்கணக்கில் வைப்பிலிட்டு, பெண்ணை ஏமாற்றிச் சென்ற சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

Advertisement

கிளிநொச்சி பொன்னகர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டு மின்சார கட்டணத்தை செலுத்துவதற்காக வங்கியொன்றுக்குச் சென்றுள்ளார்.

அங்குள்ள பண வைப்பு இயந்திரத்தில் பணத்தை வைப்பிலிடத் தெரியாத அந்தப் பெண், மின் கட்டணத்தை வைப்புச் செய்வதற்காக அருகில் நின்ற இளைஞர் ஒருவரிடம் உதவி கோரியுள்ளார்.

பணத்தை வைப்பிலிடுவதற்காக அந்த இளைஞனிடம், தனது வீட்டு மின்சார கணக்கு இலக்கத்தையும் ஆறாயிரம் ரூபாய் பணத்தையும் வழங்கியுள்ளார்.

Advertisement

அந்த இளைஞன், அப்பெண்ணுக்கு உதவி செய்வது போல் செயற்பட்டு, அவர் வழங்கிய கணக்கு இலக்கத்துக்கு பணத்தை வைப்புச் செய்வது போல் பாசாங்கு காட்டி, தனது வங்கிக் கணக்கு இலக்கத்திறகு பணத்தை வைப்புச் செய்துள்ளார்.

பின், அருகில் இருந்த குப்பை கூடைக்குள் இருந்து பணம் வைப்புச் செய்த பற்றுச்சீட்டு ஒன்றை பெண்ணிடம் கொடுத்துவிட்டு, அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளார்.

வீடு திரும்பிய பெண், அந்தப் பற்றுச்சீட்டை மகனிடம் காட்டியபோதே, அது, மின்கட்டணத்துக்கான கணக்கில் வைப்பிலிட்டதற்குரிய பற்றுச்சீட்டு அல்ல என்பது தெரியவந்துள்ளது.

Advertisement

இது தொடர்பில் பொலிஸிலும் வங்கியிலும் எதுவிதமான சாதகமான பதில்களும் கிடைக்காததால் அப்பெண் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version