பொழுதுபோக்கு
தமிழுக்கு ரூ. 25 லட்சம், மலையாள படத்துக்கு ரூ2 லட்சம்; சம்பளத்தில் பாகுபாடு காட்டிய மம்முட்டி; அவர் செய்தது நியாயம் தான் தெரியுமா?
தமிழுக்கு ரூ. 25 லட்சம், மலையாள படத்துக்கு ரூ2 லட்சம்; சம்பளத்தில் பாகுபாடு காட்டிய மம்முட்டி; அவர் செய்தது நியாயம் தான் தெரியுமா?
மலையாள திரையுலகில் மெகா ஸ்டார் என்று அழைக்கப்படும் மம்முட்டி தலைமுறைகளை கடந்து சிறந்த நடிகராக வலம் வருகிறார். இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் மொழியிலும் பல படங்களில் நடித்துள்ளார்.’ஆனந்தம்’ படத்தில் இவரது நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும். ஒரு அண்ணனாக எப்படி நடிக்க வேண்டுமோ அப்படி நடித்திருப்பார். ரஜினி நடித்த ‘தளபதி’ திரைப்படத்தில் இவர் நடித்த தேவா கதாபாத்திரம் இன்று வரை பேசும் கதாபாத்திரமாக இருக்கிறது.இன்றும் நண்பர்களுக்கு இலக்கணம் சொன்ன வேண்டும் என்றால் சூர்யா – தேவா கதாபாத்திரத்தை தான் குறிப்பிடுகிறார்கள்.’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படத்தில் இவரும் ஐஸ்வர்யா ராயும் போடும் காதல் சண்டைகள் காதலர்களை ஈர்த்தது.இப்படி தன் நடிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ’நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படத்தில் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி பிலிம் ஃபேர் விருதை வென்றார். நடிகை ஜோதிகாவுடன் நடித்த ‘காதல் தி கோர்’ திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில், நடிகர் மம்முட்டி தமிழ் படத்திற்கு ரூ. 25 லட்சமும் மலையாள படத்திற்கு ரூ.2 லட்சமும் வாங்கியது குறித்து இயக்குநர் செல்வமணி மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, “நடிகர் மம்முட்டி சாப்பாடு அவர் வீட்டில் இருந்து தான் எடுத்து வருவார். மேக்கப் மேனுக்கு, கார் ஓட்டுநர் என எல்லோருக்கும் அவரே சம்பளம் கொடுத்துவிடுவார். தயாரிப்பாளருக்கு எந்த தொல்லையும் கொடுக்க மாட்டார். நான் தமிழில் மம்முட்டியை வைத்து ஒரு படம் செய்தேன் என்னிடம் ரூ.25 லட்சம் சம்பளமாக் கேட்டார். இதே மலையாளத்தில் ஒரு படம் நடித்தார். அந்த படத்திற்கு ரூ.2 லட்சம் வாங்கினார். நான் கேட்டேன் என்னிடம் மட்டும் ரூ.25 லட்சம் வாங்கினீர்களே என்றேன். அதற்கு மம்முட்டி அந்த ரூ.2 லட்சத்திற்கு தான் ஓடும். அந்த படம் ஒரு ஆர்ட் பிலிம் என்பதால் அவ்வளவு தான் தாங்கும். அதனால் தான் அந்த தொகையை வாங்கினேன்” என்றார்.