இலங்கை

நீர்த்தேக்கத்திலிருந்து ஆயுத மூட்டைகள்; பொலிசார் அதிர்ச்சி

Published

on

நீர்த்தேக்கத்திலிருந்து ஆயுத மூட்டைகள்; பொலிசார் அதிர்ச்சி

  கதிர்காமத்தில் உள்ள வெஹெரகல நீர்த்தேக்கத்திலிருந்து 74 T-56 ரக மெகசின்கள், 35 LMG ரக ட்ரம்ஸ் மற்றும் 05 MPMG ட்ரம்ஸ் பொக்ஸ் உள்ளிட்ட பல அடையாளம் தெரியாத மெகசின்கள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் தோட்டாக்களுடன் கூடியதாக சந்தேிக்கப்படும் 2 பெட்டிகளும், ஆயுதங்கள் என சந்தேகிக்கப்படும் 2 மூட்டைகளும் அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

இராணுவத்திற்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

வெஹெரகல நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைந்து வருவதால் இந்த பொருட்கள் அவதானிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், அந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் கோனகனார பொலிஸ் பிரிவின் கீழ் வருவதால், மேலதிக விசாரணைகளுக்காக கோனகனார பொலிஸ் நிலையத்தில் அவை ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Advertisement

நீர்த்தேக்கத்தின் மதகு அருகே இன்னும் தண்ணீர் இருப்பதால், கடற்படையின் சுழியோடிகளின் உதவியுடன் அந்த இடம் ஆய்வு செய்யப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version