இலங்கை

பருத்தித்துறையில் சட்டவிரோதமாக இயங்கிய சோதிட நிலையம் அகற்றம்!

Published

on

பருத்தித்துறையில் சட்டவிரோதமாக இயங்கிய சோதிட நிலையம் அகற்றம்!

பருத்தித்துறையில் இந்தியாவைச் சேர்ந்தவர்களால் அனுமதிபெறாது சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்ட சோதிட நிலையம் ஒன்று பொலிஸாரால் நேற்றுமுன்தினம் முற்றுகையிடப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.

இந்தியா, பெங்களூரைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது மகன் ஆகிய மூவரும் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகைதந்து, பருத்தித்துறை தும்பளை வீதியில் உள்ள தங்ககம் ஒன்றில் ஒரு மாதத்துக்கு மேலாக தங்கியிருந்துள்ளனர். பின்னர் இரண்டு வாரத்துக்கு முன்னதாக அதே பகுதியில் வீடொன்றை வாடகைக்குப் பெற்று அங்கு சோதிட நிலையத்தை நடத்தியுள்ளனர். தகவலறிந்த நகரசபைத் தலைவர் அனுமதி பெற்று நிலையத்தை அமைக்குமாறும், அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தினார்.

Advertisement

எனினும் அவர்கள் அங்கிருந்து வெளியேறாததனால் பொலிஸாரின் உதவியுடன் அங்கு சென்று அவர்களது ஆவணங்களைப் பரிசோதித்தபோது அவர்கள் ஆவணங்கள் எதுவுமின்றி சட்டவிரோதமாக நிலையத்தை நடத்தியமை உறுதிப்படுத்தியதை அடுத்து அவர்களை எச்சரித்து அங்கிருந்து வெளியேற்றினர் .
 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version