உலகம்
பிலிப்பைன்ஸ் நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும்அதிகரிப்பு!
பிலிப்பைன்ஸ் நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும்அதிகரிப்பு!
பிலிப்பைன்ஸின் செபு மாகாணத்தில் நேற்றிரவு செவ்வாய்க்கிழமை(30) 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 10.00 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நிலநடுக்கத்தினால் 69பேர் உயிரிழந்துள்ளதுடன் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.