பொழுதுபோக்கு
பேட் கேர்ள் ஓ.டி.டி ரிலீஸ்: ஜியோ ஹாட் ஸ்டாரில் பார்க்க ரெடியா இருங்க!
பேட் கேர்ள் ஓ.டி.டி ரிலீஸ்: ஜியோ ஹாட் ஸ்டாரில் பார்க்க ரெடியா இருங்க!
இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிக்கும் படம் பேட் கேர்ள் (BAD GIRL). முதன்முதலில் இப்படத்தின் டீசர் வெளியான போதே படம் குறித்த சர்ச்சைகளும் சமூக வலைதளங்களில் தீயாய் எரியத் தொடங்கியது. குறிப்பிட்ட சமூக உணர்வுகளை புண்படுத்துவதாகவும், பதின்பருவ பிள்ளைகள் மனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி எனவும் படத்துக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. நீதிமன்றம் வரை சென்று சென்சாரில் பல ‘கட்’களை பெற்று ஒருவழியாக திரையரங்குகளில் கடந்த மாதம் 5 ஆம் தேதி வெளியாகியது ‘பேட் கேர்ள்’.இப்படத்தை வெற்றிமாறன் மற்றும் தனுஷிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த இயக்குநர் வர்ஷா பரத் இயக்கி இருக்கிறார். படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபள்ளி ஆகியோர் நடித்துள்ளனர். அமித் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ‘பேட் கேர்ள்’ படத்தின் நாயகி ரம்யா படிப்பு வரவில்லை, பள்ளி பருவத்திலேயே தன் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனுடன் காதல், ஆரம்பத்தில் நன்றாக சென்றாலும், இது பெற்றோர்களுக்கு தெரிந்து வழக்கம் போல் காதலுக்கு முட்டுக்கட்டை வருகிறது. அம்மா, ரம்யாவை புதிய ஸ்கூலில் சேர்க்க, அங்கு அவர் முதல் நாள் செல்லும் போதே, ‘இந்த ஸ்கூல் வரைக்கு தான் உன் பேச்சை எல்லாம் கேட்பேன், கல்லூரியில் என் இஷ்டம் எனக்கு பிடித்ததை செய்வேன், உனக்கு பிடிக்காததையும் செய்வேன்’ என்று செல்கிறார்.அதற்கு தகுந்தது போலவே அங்கு ஒரு பையனுடன் கட்டில் வரை அவர்கள் உறவு இருக்க, அந்த பையனோ சீனியர், கல்லூரி முடிந்து ரம்யாவை கழட்டி விட பார்க்கிறான். இதை அறியாத ரம்யா அவனிடம் வழிந்து வழிந்து பேச ஒரு கட்டத்தில் மருத்துவமனையில் அட்மிட் ஆகும் நிலைக்கு செல்ல, பிறகு இருவருக்கும் கடும் மோதல் வருகிறது. கடையில் ரம்யா தன் காதலை அதுவும் சரியான காதலை கண்டுப்பிடித்தாளா? என்பதே மீதிக்கதை. ‘பேட் கேர்ள்’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது ஓ.டி.டி-யில் வெளியாக இருக்கிறது. பொதுவாக திரையில் வரவேற்பை பெறாத படங்கள் ஓ.டி.டி-யில் பெரும் வரவேற்பை பெற்ற கதைகள் உண்டு. அந்த வகையில் ‘பேட் கேர்ள்’ படம் ஓ.டி.டி-யில் எந்த மாதிரியான வரவேற்பை பெறும் என்கிற ஆவல் சினிமா ரசிர்கள் மத்தியில் இருக்கிறது. ‘பேட் கேர்ள்’ படம் ஜியோஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக இருக்கிறது. தயாரிப்பாளர்கள் தேதியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், அக்டோபர் தொடக்கத்தில் இருந்து நடுப்பகுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, விஜய் டிவி மற்றும் கலர்ஸ் தமிழ் ஆகியவை சாட்டிலைட் ரைட்ஸ் பெற்றுள்ளன.