வணிகம்
மாதம் ரூ.10,000 SIP மூலம் ரூ.5 கோடி சேர்ப்பது எப்படி? ஐன்ஸ்டீனே வியந்த 8வது அதிசயம்
மாதம் ரூ.10,000 SIP மூலம் ரூ.5 கோடி சேர்ப்பது எப்படி? ஐன்ஸ்டீனே வியந்த 8வது அதிசயம்
நம்மில் பலர் செய்யும் ஒரு பொதுவான தவறு, ஓய்வூதியத்துக்காகத் திட்டமிடாமல் இருப்பதுதான். இதற்குச் சம்பளக் குறைவு, வேலைப்பளு, முதலீடு குறித்த அறிவின்மை எனப் பல காரணங்கள் இருக்கலாம். முதலீட்டு ஜாம்பவான்கள் எப்போதுமே சொல்வது இதுதான்: முதலீட்டில் மிக முக்கியமான விஷயம் ‘தொடங்குவது’, இரண்டாவது முக்கியமான விஷயம் ‘பொறுமை’, இந்த இரண்டின் விளைவுதான் ‘வெற்றி’. புகழ்பெற்ற முதலீட்டாளர் வாரன் பஃபெட் (Warren Buffett) நமக்குக் கற்பிப்பதும் இதுதான்: கூட்டு வட்டியின் (Compounding) மந்திரம் மூலம் செல்வத்தை உருவாக்க நேரமும் பொறுமையும்தான் முக்கியக் காரணிகள்.கூட்டு வட்டியின் பயனைப் பெற மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி சிறந்தது!நீங்கள் ஒழுங்காக முதலீடு செய்யும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால், ஒரு மியூச்சுவல் ஃபண்ட் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) மூலம் சிறிய முதலீடுகளையும் ஒரு பெரிய சேமிப்பாக மாற்ற முடியும். இந்த எளிய ‘ஸ்டெப்-அப் சிப்’ (Step-up SIP) திட்டத்தைப் பின்பற்றி, நீங்கள் எப்படி 50 வயதில் ₹5 கோடிக்கு மேல் ஓய்வூதிய நிதியை உருவாக்கி, மன அழுத்தமில்லாமல் ஓய்வுபெறலாம் என்பதை இங்கே விரிவாகப் பார்ப்போம்.முதலீட்டை எப்போது, எவ்வளவு தொடங்கலாம்?ஒருவர் SIP முதலீட்டை எப்போது, எவ்வளவு தொடங்கலாம் என்பதற்கு நிலையான வரம்பு இல்லை என்றாலும், பெரும்பாலான துறைகளில் உள்ள இன்றைய சராசரி சம்பளத்தைக் கருத்தில் கொண்டு இந்த அணுகுமுறையைப் பார்க்கலாம்:1. முதலீட்டைத் தொடங்கும் வயது (25 வயது)பொதுவாக, 22 வயதில் வேலை தேடிச் செல்பவர்கள், முதல் மூன்று ஆண்டுகளில் தங்களது செலவுகள், வாழ்க்கை முறைத் தேவைகள் மற்றும் நிதிப் பொறுப்புகளைச் சமாளிக்கக் கற்றுக்கொள்கிறார்கள்.மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, 25 வயதில் ஒருவர் நிதி ரீதியாக ஸ்திரத்தன்மையை உணர்ந்து SIP-இல் முதலீடு செய்யத் தொடங்கலாம் என வைத்துக் கொள்வோம்.2. ஆரம்ப மாத SIP தொகை (₹10,000)ஆரம்பக் கட்டத்தில், ஒரு மாதத்திற்கு ₹10,000 முதலீட்டில் தொடங்கலாம். (இன்றைய சராசரிச் சம்பளத்தில் இது நடைமுறைக்கு ஏற்ற தொகை)ஒருவர் 22 வயதில் வேலைக்குச் சேர்கிறார் என்று வைத்துக்கொள்வோம். முதல் மூன்று ஆண்டுகளில், செலவுகள், கடன்கள் மற்றும் வாழ்க்கை முறைத் தேவைகளைச் சமன் செய்த பிறகு, 25வது வயதில் இருந்து நிதி ரீதியாக ஸ்திரத்தன்மையை அடைந்துவிட்டீர்கள் எனக் கொள்வோம்.3. வருடாந்திர ஸ்டெப்-அப் (10% அதிகரிப்பு)சம்பளம் அதிகரிக்கும்போது, உங்களது SIP பங்களிப்பை ஆண்டுக்கு 10% அதிகரிப்பது (Step-up) அவசியம். இது ஒட்டுமொத்த முதலீட்டுத் தொகையை அதிகரிப்பதோடு, நீண்ட காலத்திற்கு கூட்டு வளர்ச்சியின் ஆற்றலையும் மேம்படுத்தும்.ஆரம்பத்திலேயே தொடங்குவது மற்றும் முதலீட்டைப் படிப்படியாக அதிகரிப்பது (Step-up) செல்வத்தைக் குவிக்க மிகவும் முக்கியம்.4. எதிர்பார்க்கப்படும் வருமானம் (15% CAGR)25 வருட முதலீட்டுக் காலவரம்பில், சராசரியாக 15% கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம் (CAGR) எதிர்பார்க்கலாம். உண்மையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சந்தையில் இருக்கும் சுமார் 130 ஈக்விட்டி ஃபண்டுகளில், 30க்கும் மேற்பட்ட ஃபண்டுகள் 15%க்கும் அதிகமான வருமானத்தை அளித்துள்ளன என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.ஆரம்ப SIP-இல் தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் 10% அதிகரித்து முதலீடு செய்தால், 25 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் மொத்த முதலீடு சுமார் ₹1.18 கோடியாக இருக்கும்.ஆனால், கூட்டு வளர்ச்சியின் காரணமாக, உங்கள் முதிர்வுத் தொகை ₹5.72 கோடியாக இருக்கும். நீங்கள் ₹4.54 கோடி இலாபம் ஈட்டியிருப்பீர்கள்!கூட்டு வளர்ச்சியின் அற்புதம் (The Compounding Effect)முதலீட்டு நிபுணர்கள் மட்டுமல்ல, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் கூட்டு வளர்ச்சியின் சக்தியை ஒப்புக்கொண்டு, அதை உலகின் “எட்டாவது அதிசயம்” என்று அழைத்தார்.எஸ்.ஐ.பி-யின் மிகப்பெரிய நன்மை கூட்டு வட்டிதான். உங்கள் முதலீடுகளின் லாபம் ஒவ்வொரு ஆண்டும் உங்கள் மூலதனத்துடன் சேர்க்கப்படுகிறது, இது அடுத்த ஆண்டு இன்னும் அதிக லாபத்திற்கு வழிவகுக்கிறது. நீண்ட காலப்போக்கில், சிறிய முதலீடுகளும் ஒரு பெரிய செல்வமாக மாறுவதற்கு இதுவே காரணம்.25 ஆண்டுகள் போன்ற நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து எஸ்.ஐ.பி செய்பவர்கள், சந்தை ஏற்ற இறக்கங்களைப் பொருட்படுத்தாமல், சராசரி நீண்ட கால லாபத்தைப் பெறுவதன் மூலம் பயனடைவார்கள். அதனால்தான், சிறிய முதலீடுகளைக் கூட நீண்ட காலத்திற்கு வளர்க்க எஸ்.ஐ.பி மிகவும் பயனுள்ள வழியாகக் கருதப்படுகிறது.கவனத்திற்கு!இங்கே நாம் நீண்ட காலத்தில் பல ஈக்விட்டி ஃபண்டுகள் வழங்கியதைப் போல 15% கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதத்தை (CAGR) அனுமானிக்கிறோம். ஆனால், கடந்த கால லாபம் எதிர்கால லாபத்திற்கு உத்தரவாதம் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும், முதலீட்டில் எப்போதும் அபாயம் உள்ளது.எனவே, முதலீடு செய்யும் போது நிதித் தேர்வு, பல்வகைப்படுத்தல் (Diversification) மற்றும் உங்கள் இடர் சுயவிவரத்தைக் கருத்தில் கொள்வது அவசியம். எந்தவொரு முதலீட்டு முடிவையும் எடுப்பதற்கு முன், சரியான தகவல்களைச் சேகரித்து, அபாயங்களைப் பற்றி அறிந்திருப்பது உங்களுக்கு மிகவும் நல்லது.(பொறுப்பு துறப்பு: மேலே உள்ள உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் நிதி ஆலோசகரைக் கலந்தாலோசிக்கவும்.)