இலங்கை
யாழில் தீப்பந்தப் போராட்டம்
யாழில் தீப்பந்தப் போராட்டம்
யாழில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதி நாளான இன்று (01) தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி செம்மணியில்நடத்தப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று (01) நிறைவுக்கு வந்தது.
இறுதி நாளில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் பாரிய தீப்பந்தப் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.