வணிகம்

₹19.99 லட்சம் வரை விலை: கொங்கு மண்டலத்தில் முதல்முறையாக ‘5 ஸ்டார்’ பாதுகாப்புடன் மாருதி சுசூகி விக்டோரிஸ் கார் அறிமுகம்

Published

on

₹19.99 லட்சம் வரை விலை: கொங்கு மண்டலத்தில் முதல்முறையாக ‘5 ஸ்டார்’ பாதுகாப்புடன் மாருதி சுசூகி விக்டோரிஸ் கார் அறிமுகம்

பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே, மாருதி சுசூகியின் அதிநவீன சொகுசு காரான ‘விக்டோரிஸ்’ (INVICKTO) கார், கொங்கு மண்டலத்தில் முதன்முறையாக அனைத்து வசதிகளுடன் கோவையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. சின்னத்திரை நட்சத்திரமும், பிரபல பேச்சாளருமான நீயா நானா கோபிநாத் இந்தக் காரை அறிமுகம் செய்து வைத்து சிறப்பித்தார்.கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அம்பாள் ஆட்டோ டீலர்ஷிப்பான மாருதி சுசூகி அரீனா விற்பனை நிலையத்தில், விக்டோரிஸ் கார் அறிமுக விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அம்பாள் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அசோகன் முத்துசாமி, துணைத் தலைவர் அனீஸ் முத்துசாமி, மற்றும் இயக்குநர் சந்தான செல்வி ஆகியோர் முன்னிலையில் கோபிநாத் புதிய காரை திரைநீக்கம் செய்து அறிமுகப்படுத்தினார்.விக்டோரிஸின் சிறப்பு அம்சங்கள்இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அம்பாள் ஆட்டோ நிறுவனத்தின் பொது மேலாளர் ராஜேஷ் ஜெயராமன், புதிய கார் குறித்துப் பெருமிதத்துடன் பேசினார்.”பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த மாருதி சுசூகி விக்டோரிஸ் காரை அறிமுகம் செய்வதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இது ஒரு ப்ரீமியம் வகை கார். மாருதி சுசூகியின் வரலாற்றில் இத்தனை வசதிகள் அடங்கிய ஒரு காரை நாங்கள் இதற்கு முன் அறிமுகப்படுத்தியதில்லை. ‘இதில் இல்லாத வசதிகளே இல்லை’ என்பதை உணர்த்தும் வகையில்தான் இதன் ஸ்லோகனும் அமைந்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.மேலும் அவர் தெரிவித்த அம்சங்கள்:இந்த கார் மிக பாதுகாப்பானது என்பதை உணர்த்தும் வகையில் 5 நட்சத்திரப் புள்ளிகளைப் பெற்றுள்ளது.பல்வேறு நவீன வசதிகள் கொண்ட இந்த சொகுசு கார், ரூ. 10.99 லட்சம் முதல் ரூ. 19.99 லட்சம் வரையிலான விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மிகவும் ஸ்டைலான வடிவமைப்புடன், 10 விதமான வண்ணங்களில் இந்தக் கார் விற்பனைக்குக் கிடைக்கிறது.இந்திய ஆட்டோமொபைல் துறை நிபுணர்கள் இந்தக் காரின் ஸ்டைலையும் வசதிகளையும் வெகுவாகப் பாராட்டியுள்ளதாகவும், சமீபத்தில் வெளியான கார்களில் விக்டோரிஸ் பெற்ற அளவுக்குச் சாதகமான விமர்சனங்களைப் பெற்ற கார் எதுவும் இல்லை என்பது பெருமைக்குரிய விஷயம் என்றும் ராஜேஷ் ஜெயராமன் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version