தொழில்நுட்பம்
6,000mAh பேட்டரி, 50MP கேமரா, 256GB ஸ்டோரேஜ்… ஜெமினி ஏ.ஐ-உடன் மிரட்ட வரும் ரியல்மி!
6,000mAh பேட்டரி, 50MP கேமரா, 256GB ஸ்டோரேஜ்… ஜெமினி ஏ.ஐ-உடன் மிரட்ட வரும் ரியல்மி!
ரியல்மி நிறுவனம் அதன் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான ரியல்மி P3 லைட் 4G-ஐ விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்னரே, போலந்தைச் சேர்ந்த ஒரு இ-காமர்ஸ் இணையதளத்தில் (Euro.com.pl) வெளியாகி, ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போனின் முழு விவரக்குறிப்புகள், விலை மற்றும் நிறங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ரியல்மி P3 லைட் 4G-ன் 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் மாடலானது, போலந்து இணையதளத்தில் PLN 599 (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.14,000) விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இது பச்சை (Green), வெள்ளை (White) ஆகிய இரு வண்ணங்களில் விற்பனைக்கு வரும்.முக்கிய அம்சங்கள் (Specifications)செயலி (Processor): இந்த புதிய ரியல்மி போன், ஆக்டா-கோர் யூனிசாக் T7250 (Unisoc T7250) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.ரேம்-ஸ்டோரேஜ்: இது ஒரே வேரியண்ட்டில் வரலாம் எனத் தெரிகிறது. அது 8GB ரேம்+256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகும். குறிப்பாக, இது கூடுதலாக 16GB வரை விர்ச்சுவல் ரேம் வசதியையும் கொண்டுள்ளது. ரியல்மி P3 லைட் 4G ஆனது, சமீபத்திய ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்துடன் வெளிவரும் எனத் தெரிகிறது.டிஸ்ப்ளே: இது 6.67 இன்ச் அளவுள்ள LCD திரையைக் கொண்டுள்ளது. திரையின் தெளிவுத்திறன் (Resolution) குறைவாக இருந்தாலும் (720×1,604 பிக்சல்கள்), பட்ஜெட் விலைக்கு ஏற்ப இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் வருகிறது. இதனால் ஸ்க்ரோலிங் மற்றும் அனிமேஷன்கள் மிகச் சீராக இருக்கும்.கேமரா: புகைப்படம் எடுப்பதற்காக, இதன் பின்புறத்தில் 50mp கொண்ட பிரதான கேமரா (f/1.8 Aperture) பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 5mp முன் கேமரா (f/2.2 Aperture) கொடுக்கப்பட்டுள்ளது.நீண்ட நேரம் நீடிக்கும் வகையில், இந்த போன் ஒரு பெரிய 6,000mAh திறன் கொண்ட பேட்டரியுடன் வருகிறது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 2 நாட்கள் வரை பேட்டரி லைஃப் கிடைக்கும் என்று நிறுவனம் விளம்பரப்படுத்துகிறது. இது 15W சார்ஜிங் சப்போர்ட்டைக் கொண்டு உள்ளது.இந்த போனின் முக்கிய சிறப்பம்சமாக, கூகுளின் சக்தி வாய்ந்த ஜெமினி AI (Google Gemini) ஒருங்கிணைப்பு வசதி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், இது ஐ.பி54 மதிப்பீடு பெற்றுள்ளதால் நீர் மற்றும் தூசியிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கும். இது தவிர, திடமான Armorshell வடிவமைப்பு மற்றும் வயர்லெஸ் தகவல்தொடர்புக்கு உதவும் NFC 360 ஆதரவும் இதில் உள்ளன. மொத்தத்தில், ரியல்மி P3 லைட் 4G ஆனது பெரிய பேட்டரி, சமீபத்திய ஆண்ட்ராய்டு OS மற்றும் AI அம்சங்களை விரும்புபவர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான பட்ஜெட் தேர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.