பொழுதுபோக்கு

Idli Kadai Tamil Movie Review Live Updates: தனுஷ் மீண்டும் நடிப்பில் உச்சம்; படத்தின் முதல் பாதி செம்ம..! இட்லி கடை விமர்சனம்

Published

on

Idli Kadai Tamil Movie Review Live Updates: தனுஷ் மீண்டும் நடிப்பில் உச்சம்; படத்தின் முதல் பாதி செம்ம..! இட்லி கடை விமர்சனம்

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இயக்குனராகவும் கலக்கி வரும் அவரின் இயக்கத்தில் ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம், எம்மாதிரியான கதைக்களத்துடன் இருக்கும் என மக்களிடம் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ‘யு’ தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.  இட்லி கடை விமர்சனம் தொடர்பாக ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “தனுஷ் மற்றும் அருண்விஜய் ஆகியோரின் வெளிநாட்டு நவீன பின்னணி மற்றும் கதாபாத்திரத்துடன் படம் தொடங்கியது. நித்யாமேனனின் கதாபாத்திரம் மற்றும் கதாபாத்திரத்தைச் சுற்றியுள்ள வேடிக்கையான தருணங்கள் மிகவும் பிடித்திருந்தது. நடிகர் தனுஷ் மீண்டும் ஒருமுறை நடிப்பால் உச்சத்தை அடைந்துள்ளார். குறிப்பாக உணர்ச்சிகரமான காட்சிகள். ஜி.வி.பிரகாஷ் மோன்டேஜ் பாடல்கள் மற்றும் இடைவேளையின் போது அவரது பின்னணி இசை சிறப்பாக இருந்தது. இடைவேளை படத்தின் பின்னணி காட்சிகள் சிறப்பாக இருந்தன. முதல் பாதி டிரெய்லரில் இருந்து நாம் பார்த்ததுதான், இரண்டாம் பாதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார். #IdliKadai First Half – Too Good❣️- Started off with the Foreign modern backdrop & character arc of Dhanush & ArunVijay 🌟- Loved NithyaMenen’s character & Fun moments surrounding the character😀- Actor #Dhanush once again peaked with performance, especially Emotional… pic.twitter.com/zMLgt1AN8Jதனுஷ் இயக்கி நடித்திருக்கும்  இட்லி கடை இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், படத்தின் விமர்சனம் தொடர்பாக உடனுக்குடன் அறிய தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version