இலங்கை
இலங்கையில் எகிறும் தேசிக்காய் விலை
இலங்கையில் எகிறும் தேசிக்காய் விலை
தம்புள்ளை சிறப்பு பொருளாதார மையத்தில் தற்போது ஒரு கிலோ தேசிக்காய் ரூ.1700 முதல் 1800 வரை விற்பனை செய்யப்படுவதாக தம்புள்ளை வர்த்தக சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
தேசிக்காய் அறுவடை குறைந்து, தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்ய முடியாததால் அதன் விலை உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஒரு கிலோ பூசணிக்காயின் மொத்த விலை ரூ.30 முதல் 60 வரை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறுகிறார் .
ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.230, ஒரு கிலோ பீட்ரூட் ரூ.50 முதல் 60 வரை, ஒரு கிலோ தக்காளி ரூ.110, ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.160, ஒரு கிலோ நூக்கல் ரூ.130 என விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.