இலங்கை
இலங்கையுடனான வர்த்தகம் அமெ. தடைகளால் பாதிக்கும்; ரஷ்யத் தூதுவர் தெரிவிப்பு!
இலங்கையுடனான வர்த்தகம் அமெ. தடைகளால் பாதிக்கும்; ரஷ்யத் தூதுவர் தெரிவிப்பு!
ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள தடைகள் காரணமாக, ரஷ்யா மற்றும் இலங்கைக்கான இருதரப்பு வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறைக்குப் பாதிப்பு ஏற்படும் என்று ரஷ்யத்தூதுவர் லெவன் ஜாகார்யன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா விதித்துள்ள தடைகள் காரணமாக இலங்கையில் மின்னணுப் பரிவர்த்தனைகள் சாத்தியமற்றது. அதனால், ரஷ்ய சுற்றுலாப்பயணிகள் கையில் பணத்தை எடுத்துச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படும். ரஷ்யா – உக்ரைன் போர் முடிந்த பின்னரே, இருதரப்பு வர்த்தகத்தைத் தொடரமுடியும். போரை முடிவுக்குக் கொண்டு வருவதாயின், தடைகளை நீக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.