இலங்கை

இலங்கை சிறைகளில் தங்கியுள்ள 47 குழந்தைகள்!

Published

on

இலங்கை சிறைகளில் தங்கியுள்ள 47 குழந்தைகள்!

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளுடன் 47 சிறார்கள் சிறைச்சாலையில் தங்கியுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

 குறித்த சிறுவர்கள், நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

 இதன்படி, 20 சிறுவர்களும் 27 சிறுமிகளும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தகவல்களின்படி, 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1483 பெண்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 அவர்களில் 229 பெண்கள் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்றுள்ளனர்.

Advertisement

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 184 பெண்கள் போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 இதேவேளை இலங்கையில் தற்போது மொத்தம் 19 பெண்கள் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர் என்று சிறைச்சாலைகள் செய்தித் தொடர்பாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் 24 பெண்கள் தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version