இலங்கை

கடித்துக்குதறிய மருமகள் ; வலியில் கதறிய மாமனார்

Published

on

கடித்துக்குதறிய மருமகள் ; வலியில் கதறிய மாமனார்

 இந்தியாவில் 70 வயது மாமனாரின் கைவிரலை மருமகள் கடித்து குதரிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ஒரு சிறிய கிராமத்தில், 70 வயது நிரம்பிய ராமச்சந்திரா என்ற முதியவர் தனது வீட்டில் அமைதியாக வாழ்ந்து வந்தார்.

Advertisement

அவரது மருமகள் சசிகலாவுடன் வீட்டு விவகாரங்கள், சிறு சிறு விஷயங்களில் தொடங்கும் வாக்குவாதங்கள், அவை எப்போதும் பெரிய பிரச்சினைகளாக மாறிவிடும்.அன்று செப்டம்பர் 30, வழக்கம்போல் ஒரு சிறிய வாக்குவாதம் தொடங்கியது.

ராமச்சந்திரா தனது அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, உள்ளே நுழைந்து . நீங்கள் எப்போதும் என்னைத் தொந்தரவு செய்கிறீர்கள் என்று சசிகலா கத்தினாள்.

திடீரென, அவள் ராமச்சந்திராவின் கையைப் பிடித்து, அவரது கட்டை விரலை கடித்தாள்.

Advertisement

மாமனார் வலியில் அலறிய போதும் சசிகலா நிறுத்தவில்லை அந்த விரலை துப்பிவிட்டு, அவரை அடித்து துன்புறுத்தினாள்.

காயமடைந்த ராமச்சந்திரா, வலியால் துடித்தபடி அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்ற நிலையில் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

“எனது மருமகள் என்னை தாக்கினாள், என் விரலை கடித்தாள்,” என அவர் போலீசில் புகார் அளித்தார்.

Advertisement

. போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கினர்.

இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version