சினிமா

சமந்தா கழுத்தை சுற்றிய பாம்பு.. ட்ரெண்டிங் லுக்கில் அசத்தும் நடிகை சமந்தா

Published

on

சமந்தா கழுத்தை சுற்றிய பாம்பு.. ட்ரெண்டிங் லுக்கில் அசத்தும் நடிகை சமந்தா

தென்னிந்திய சினிமாவில்  பிரபலமான கதாநாயகிகளுள் ஒருவர் தான் சமந்தா. இவர் தற்போது படங்களில் மட்டும் இன்றி வெப் தொடர்களிலும் தனது கவனத்தை செலுத்தி வருகின்றார். மேலும் சில திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார் சமந்தா. அதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்  நடிப்பு மட்டும் இன்றி சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா,  தனது போட்டோ ஷூட்,  படங்கள் தொடர்பிலான அப்டேட்ஸ், ஜிம் மற்றும் லேட்டஸ்ட் அப்டேட்ஸ் தொடர்பில் அடிக்கடி பதிவுகளை பகிர்வார். இவர் வெளியிடும் புகைப்படங்கள்,  வீடியோக்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.  தற்போது சமந்தா காதல் வலையிலும் சிக்கிக் கொண்டுள்ளார். ஆனால் இது தொடர்பில் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில், நடிகை சமந்தா தற்போது  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் பார்ப்பதற்கு வித்தியாசமான ஆடையுடன் கழுத்து மற்றும் கை விரல்களில் பாம்பு வடிவத்தில் அமைந்த  அணிகலன்களையும்  அணிந்துள்ளார்.  இந்த போட்டோ ஷூட் தற்போது ட்ரெண்டாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version