இலங்கை
சிறுவர் தினமும் வாணி விழாவும்!
சிறுவர் தினமும் வாணி விழாவும்!
இணுவில் பொது நூலக சிறுவர் திறன்விருத்தி மைய மாணவர்களின் சிறுவர் தினமும் வாணி விழாவும் நேற்றுக்காலை (01) அதிபர் திருமதி.கமலராணி கிருஸ்ணபிள்ளை தலமையில் ஆரம்பமானது.
நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக இணுவில் பொது நூலக லண்டன் அமைப்புக்குழு அமைப்பாளர் இ.சிவகுமார் கலந்து சிறப்பித்ததோடு, மங்கல விளக்கேற்றல் இடம்பெற்று, மாணவர்களின் தேவாரம் இசைக்கப்பட்டது.
சிறுவர் தின சிறப்பு உரைகளை இணுவில் பொது நூலக போசகர்களான பேராசிரியர் தேவராஜா இரா.அருட்செல்வம் ஆசிரியர் நிகழ்த்தியதை தொடர்ந்து அதிபர் உரை இடம்பெற்றது. தொடர்ந்து சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி வைக்கப்பட்டன. மேலும் சிறுவர்களின் பேச்சு, பாடல்கள், மற்றும் கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.