இலங்கை
சுற்றுலாவை மேம்படுத்த பருத்தித்துறை முனையில் படகுச் சவாரிக்கு ஏற்பாடு!
சுற்றுலாவை மேம்படுத்த பருத்தித்துறை முனையில் படகுச் சவாரிக்கு ஏற்பாடு!
வடமராட்சி பருத்தித்துறை முனை கடற்கரைப் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் படகுச் சவாரிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றால், மூன்று மில்லியன் ரூபா நிதியில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மிகக் குறைந்த கட்டணத்தில் சாதாரண மக்களும் பயன்படுத்தக் கூடிய வகையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அதனை ஏற்பாடு செய்த பருத்தித்துறை நகர பிதா வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தெரிவித்துள்ளார்.