இலங்கை
தாஜூதீனின் உயிரிழப்புத் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை தேவையாம்; கோருகின்றார் நாமல்!
தாஜூதீனின் உயிரிழப்புத் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை தேவையாம்; கோருகின்றார் நாமல்!
தாஜுதீனின் மரணம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை அவசியம் -என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- தாஜுதீன் விடயத்தை தமது அரசியல் இலாபங்களுக்கு பயன்படுத்தாமல் அரசாங்கம் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும். தற்போதுள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவு பொய்யான சாட்சியங்களை உருவாக்கி அரசாங்கத்தை மகிழ்வித்து வருகிறது. இந்த விடயத்திலும் அவ்வாறு செயற்பட்டால். அது தற்போதைய அரசாங் கம் தாஜுதீனின் ஆன்மாவுக்கு இழைக்கும் அநீதியாகவே அமையும். அரசாங்கத்திடம் கேள்விகளை எழுப்பும்போது அரசாங்கம் குறித்த விடயத்தை நீர்த்துப்போகச் செய்வதற்காக. பிறிதொரு விடயத்தை முன்வைக்கின்றது. இதை ஏற்க முடியாது. அத்துடன், மைத்திரி – ரணில் கூட்டாட்சிக் காலத்திலும் தாஜுதீனின் உயிரிழப்பில் ராஜபக்சக்களைத் தொடர்புபடுத்தி பொய்யான சாட்சியங்கள் உருவாக்கப்பட்டன -என்றார்.