இலங்கை
நஞ்சானது உணவு; 47 மாணவர்கள் மருத்துவமனையில்!
நஞ்சானது உணவு; 47 மாணவர்கள் மருத்துவமனையில்!
உணவு நஞ்சாக மாறியதைத் தொடர்ந்து 45 மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹிங்குரக்கொட பகமூன கல்வி வலயத்தில் கோட்டபிட்டிய கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களாவர்.
சிறுவர் தினமான நேற்று பாடசாலையில் வைத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவே நஞ்சாக மாறியதாக கூறப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை பகமுனப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.