இலங்கை
பால் உற்பத்தி மேம்பாட்டுக்கு ஜப்பானுடன் ஒப்பந்தம்!
பால் உற்பத்தி மேம்பாட்டுக்கு ஜப்பானுடன் ஒப்பந்தம்!
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், இலங்கையின் பால் உற்பத்தித் துறையின் செயற்றிறனை மேம்படுத்தும் பிரதான ஒப்பந்தம் நேற்றுமுன்தினம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் தலைவர் டனாகா அகிஹிகோவை சந்தித்துக் கலந்துரையாடிய போதே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கையின் அபிவிருத்திக்கு ஜப்பான் மீண்டும் கடன் வழங்க ஆரம்பித்துள்ளது. இதனை நினைவுபடுத்திய ஜனாதிபதி ஜப்பான் வழங்கும் தொடர்ச்சியான ஆதரவுக்கு சந்திப்பில் நன்றி தெரிவித்தார். இலங்கையுடனான நீண்டகால ஒத்துழைப்பை மேலும் பேணுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கழிவு முகாமைத்துவத் திட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் டிஜிற்றல் பொருளாதாரத்துறையை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பிலும் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.