இலங்கை

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களுக்கு நிரந்தர குடியுரிமைக்கான கால அவகாசம் இரட்டிப்பு

Published

on

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களுக்கு நிரந்தர குடியுரிமைக்கான கால அவகாசம் இரட்டிப்பு

பிரித்தானியாவில் நிரந்தரமாக வசிக்கும் உரிமை பெறுவதற்கு புலம்பெயர்ந்தவர்களுக்கான தகுதி காலத்தை பத்து ஆண்டுகளாக உயர்த்தி பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.

தற்போது இருக்கும் நடைமுறைகளின்படி, அகதிகளாக வந்து தஞ்சம் அடைந்தவர்கள், ஐந்து ஆண்டுகள் பிரித்தானிய வாழ்ந்தால் நிரந்தரமாக வசிக்கும் தகுதி பெறுகின்றனர்.

Advertisement

அத்தோடு, தங்களின் குடும்பத்தினரையும் பிரித்தானியாவிற்கு அழைத்து வரும் உரிமையும் வழங்கப்பட்டது.

இந்த நடைமுறை இனி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரிதானிய உள்துறை அமைச்சர் புலம்பெயர்ந்தோருக்கான விதிகளை வெளியிட்டுள்ளார்.

Advertisement

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நிரந்தரமாக வசிப்பதற்கு அனுமதி பெறுவதற்கான தகுதிக்காலம் பத்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினரை பிரித்தானியா அழைத்து வரும் நடைமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பம் செப்டம்பர் மாதத்தில் இருந்தே நிறுத்தப்பட்டு விட்டது.

Advertisement

குற்றங்களில் ஈடுபடாமல் இருத்தல் மற்றும் ஆங்கிலம் பேசுதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

அதேவேளையில் அகதிகளாக வருபவர்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் என்றும் மற்றும் அவர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு உரிமைகள் வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவில் பிற நாட்டவர்களுக்கான கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்ட நிலையில் தற்போது பிரித்தானியாவிலும் இது கடுமையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version