இலங்கை

முதலிரவில் உயிரிழந்த புது மாப்பிள்ளை; அதிர்ச்சியில் உறவினர்கள்!

Published

on

முதலிரவில் உயிரிழந்த புது மாப்பிள்ளை; அதிர்ச்சியில் உறவினர்கள்!

 இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் ஜவுன்பூர் மாவட்டத்தில் உள்ள குச்சுமுச் கிராமத்தில் வசிப்பதென்று 75 வயது விவசாயி முதலிரவில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்பு தனது முதல் மனைவி இறந்ததன் பிறகு தனிமையில் வாழ்ந்து வந்த சங்க்ருராம், மீண்டும் திருமணம் செய்வதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Advertisement

இருப்பினும், நான் இரண்டாம் திருமணம் செய்தே தீருவேன் என்று தனது முடிவில் உறுதியாக இருந்த அவர், குடும்ப எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

செப்டம்பர் 29 அன்று ஜலால்பூர் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் மன்பவதியை சங்க்ருராம் திருமணம் செய்துகொண்டார்.

முதலில் நீதிமன்றத்தில் திருமணப் பதிவு செய்யப்பட்டதோடு, அருகிலுள்ள கோயிலில் பாரம்பரிய ரீதிகளின்படி திருமணச் சடங்குகள் நடைபெற்றன.

Advertisement

இந்தத் திருமணம் குடும்ப உறவினர்கள் இல்லாமல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

ஆனால், முதலிரவு முடிந்த அதிகாலை சங்க்ருராமின் உடல்நலம் திடீரென மோசமடைந்தது.

அவசரமாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டும், அவரை காப்பாற்ற இயலவில்லை.

Advertisement

இது குறித்து மணப்பெண்ணிடம் கேட்ட போது, இரவு நன்றாக தான் இருந்தார்.

ஆனால், அதிகாலையில் என்ன ஆனது என்றே தெரியவில்லை என கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில் முதலிரவில் முதியவரின் திடீர் இறப்பு கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version