இலங்கை
முதியவர்களின் அனுபவங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உந்துசக்தி; எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு!
முதியவர்களின் அனுபவங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உந்துசக்தி; எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு!
இலங்கையின் மக்கள் தொகையில் 100 வயதைக் கடந்து கிட்டத்தட்ட 547 பேர் உள்ளனர் என்று அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சிறந்த அனுபவசாலிகளாக இருப்பதுடன், ஆரோக்கியமாக வாழ்ந்தனர் என்பதற்கும் எடுத்துக்காட்டானவர்கள். இவர்களை நாட்டின் வளர்ச்சியில் பயனுள்ள வகையில் இணைத்துக்கொள்வது எமது பொறுப்பாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
சிறுவர்களின் பாதுகாப்பு சமூகத்தின் நல்வாழ்வாகும். சமூகத்தின் நல்வாழ்வை எதிர்காலத்துக்கு பரம்பரையாக்கும் முதியவர்கள் ஒரு நாட்டின் முன்னோடிகள். இவர்களைப் பாதுகாத்தல், பராமரித்தல், பொறுப்புகள் மற்றும் கடமைகளைச் சரியாக நிறைவேற்றுவது அனைவரின் பொறுப்பாகும்.
தற்போதைய சமூகத்தில் சிறுவர்கள், முதியவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பரிசீலிப்பதில் அதிககவனம் செலுத்த வேண்டும். சமூகத்தை விழிப்புணர்வு செய்வதற்கான திட்டங்கள் மேலும் பலப்படுத்தப்படவேண்டும் – என்றார்.