இலங்கை
மோ.சைக்கிள் – கார் நுணாவிலில் விபத்து; இருவர் படுகாயம்!
மோ.சைக்கிள் – கார் நுணாவிலில் விபத்து; இருவர் படுகாயம்!
மோட்டார் சைக்கிளும் காரும் மோதிவிபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நேற்றுமுன்தினம் மாலை சாவகச்சேரி நுணாவில் பகுதியில் நடந்துள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் காருடன் மோதியதில் விபத்துச் சம்பவித்துள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளனர். விபத்துத் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.