இலங்கை
விலங்கு விசர்நோய் தடுப்பூசி ஏற்றல்!!
விலங்கு விசர்நோய் தடுப்பூசி ஏற்றல்!!
சாவகச்சேரி நுணாவில் மேற்கு கிராமசேவகர் பிரிவில் இன்று வியாழக்கிழமை தொடக்கம் வளர்ப்பு நாய்களுக்கு விலங்கு விசர் நோய்க்கெதிரான ஏ.ஆர். வி.தடுப்பூசி ஏற்றல் ஆரம்பமாகவுள்ளது.
அதன் பிரகாரம் நுணாவில் மேற்கு திலகம் பள்ளம் ஓய்வுமடம் மற்றும் வீரபத்திரர் கோவில் முன்றல் ஆகிய இடங்களில் காலை 9 மணிக்கும், தாய் சேய் கிளினிக் நிலையம் மற்றும் வேரக்கேணி கந்தசாமி கோவில் முன்றல் ஆகிய இடங்களில் மு.ப. 11 மணிக்கும். வேதாந்த மடத்தடி மருதடிப் பிள்ளையார் கோவில் முன்றல் மற்றும் வான்மதி சனசமூக நிலையம் ஆகிய இடங்களில் பி.ப. 1 மணிக்கும் இலவசமாக தடுப்பூசிகள் ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.