பொழுதுபோக்கு

அம்மன் வேடத்தில் அசத்தல், பெயர் மாற்றம் செய்யப்பட்ட மூக்குத்தி அம்மன்? ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Published

on

அம்மன் வேடத்தில் அசத்தல், பெயர் மாற்றம் செய்யப்பட்ட மூக்குத்தி அம்மன்? ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.தமிழ் சினிமாவில் காமெடி இயக்குனர் என்று பெயரெடுத்த சுந்தர்.சி அரண்மனை சீரிஸ் படங்களை இயக்கி திகில் பட இயக்குனர் என்றும் பெயர் பெற்றுள்ளார். தற்போது இவர் நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் பாகம் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற நிலையில், தற்போது சுந்தர்.சி. இயக்கத்தில் 2-வது பாகம் தயாராகி வருகிறது. இரண்டு பாகங்களிலும் நயன்தாராவே அம்மனாக நடிக்கிறார்.இதனிடையே இந்த படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 3 மொழிகளில் வெளியாகியுள்ள இந்த போஸ்டரில், தெய்வீக அவதாரத்தில் இருக்கும் நயன்தாரா, பாரம்பரிய உடையில், கோவில் நகைகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மனாக காட்சி அளிக்கிறார். இந்த படத்திற்கு தெலுங்கு மற்றும் இந்தியில், “மகாசக்தி” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் அம்மன் கெட்டப்பில், ஆபரணங்களுடன் பச்சை நிற பட்டுச் சேலை அணிந்த அம்மன் உருவத்தில் காட்சியளிக்கிறார்.அவர் கையில் திரிசூலத்தை ஏந்தியுள்ளார் மற்றும் மிகவும் கலக்கமாகத் தெரிகிறார். இப்படத்தில் பிரபல கன்னட நடிகர், துனியா விஜய், ரெஜினா கசண்ட்ரா, சுனில், யோகி பாபு, அபினயா, இனியா, கருடா ராம், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத், அஜய் கோஷ், மற்றும் மைனா நந்தினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் ரசிகர்கள் என பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.A post shared by N A Y A N T H A R A (@nayanthara)ஆர்.ஜே. பாலாஜி எழுதி இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் பெரிய வெற்றியாக அமைந்தது. இந்த படத்தை என்.ஜே. சரவணனும் இணைந்து இயக்கினார். இதில்  ஊர்வசி, ஸ்ருதி வெங்கட், மது மைலன்கோடி, அபினயா, மௌலி மற்றும் அஜய் கோஷ்  உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். போலி சாமியாரைத் தோலுரித்துக் காட்டத் துடிக்கும் ஒரு செய்தி வாசிப்பாளரைப் பற்றிய இந்த படம் கடந்த 2020-ம் ஆண்டு டிஸ்னி ஹாஸ்ட்ரில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version