பொழுதுபோக்கு

அலாதியான சிரிப்பை வரவைக்கும் ஃபீல் குட் மலையாள படங்கள்… இந்த ஓ.டி.டி-யில் இருக்கு; பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

Published

on

அலாதியான சிரிப்பை வரவைக்கும் ஃபீல் குட் மலையாள படங்கள்… இந்த ஓ.டி.டி-யில் இருக்கு; பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

ஒவ்வொரு வாரமும் ஓ.டி.டி தளத்தில் என்ன படங்கள் வெளியாக போகிறது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருப்பார்கள். அந்த வகையில் இந்த வாரம் ஓ.டி.டி தளத்தில் மனதைத் தொடும் மலையாள படங்கள் வெளியாகியுள்ளது. சஹாசம்இயக்குநர் பிபின் கிருஷ்ணா இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘சஹாசம் ‘. ஓணம் முடிந்து நீண்ட நாட்களாகியும் இப்படத்தில் இடம்பெற்றிருந்த ஓணம் பாடல் இன்றும் இன்ஸ்டாவில் உற்சாகம் அளிப்பதாக உள்ளது. ரம்ஜான் முகமது மற்றும் கெளரி ஜி. கிஷன், நரேன் மற்றும் பாபு ஆண்டனி நடித்துள்ள இப்படம் சன் நெக்ஸ்ட் மற்றும் ஓ.டி.டி பிளே-விலும் ஸ்ட்ரீமாகி வருகிறது.ஹிருதயபூர்வம் ‘எம்புரான்’, ’தொடரும்’ போன்ற படங்களுக்கு பிறகு மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் ‘ஹிருதயபூர்வம்’. இயக்குநர்  சத்யன் அந்திக்காட் இயக்கியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன், சங்கீத் பிரதாப் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஓ.டி.டி பிளே மற்றும் ஜியோ ஹாட் ஸ்டார் ஓ.டி.டி தளங்களில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.மைனே பியார் கியாஹிருது ஹாரூன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள திரைப்படம் ‘மைனே பியார் கியா’. இதே தலைப்பில் கடந்த 1980-ஆம் ஆண்டு பாலிவுட்டில் சல்மான் கான் நடிப்பில் திரைப்படம் ஒன்று வெளியானது. தற்போது இதே டைட்டிலில் மலையாளத்தில் படம் வெளியாகியுள்ளது.ஹிருது ஹாரூன் மற்றும் பிரீத்தி முகுந்தன் இவரும் தங்கள் காதலுக்கு என்னென்ன பிரச்சனைகளை எதிர்க்கொள்கிறார்கள் என்பது தான் ‘மைனே பியார் கியா’ படத்தின் கதைக்களம். காதல், நகைச்சுவை மற்றும் அதிரடி காட்சிகள் நிறைந்த இப்படம் இன்று முதல் ஓ.டி.டி பிளே மற்றும் Lionsgate Play-வில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.சர்கீத்தாமர் கே.வி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சர்கீத்’. இந்த படத்தில் ஆசிஃப் அலி உட்பட பலர் நடித்துள்ளனர். வளைகுடாவில் வேலை தேடி செல்லும் இளைஞருக்கும் அங்கு உள்ள சிறு பையனுக்கு இடையிலான பிணைப்பை இப்படம் எடுத்துரைக்கிறது. நடிகர் ஆசிஃப் அலி தனது உணர்ச்சிகரமான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இப்படம் மனோரமா மேக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version