இலங்கை
இன்று நாடு முழுவதிலும் மதுபானசாலைகளுக்கு பூட்டு!
இன்று நாடு முழுவதிலும் மதுபானசாலைகளுக்கு பூட்டு!
சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, இன்று (3) நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என்று இலங்கை மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி அனுசரிக்கப்படும் சர்வதேச மது ஒழிப்பு தினமானது, மதுவிலக்கு இயக்கம் பற்றிய பொதுமக்களின் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், மது பானங்களை மிதமாக உட்கொள்ள அல்லது பல சந்தர்ப்பங்களில் முற்றிலும் தவிர்க்க ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதன்படி, 2025 அக்டோபர் 2 ஆம் திகதி மூடப்படும் நேரத்திலிருந்து 2025 அக்டோபர் 4 ஆம் திகதி திறக்கும் நேரம் வரை மதுபானசாலைகள் மூடப்பட்டிருக்கும் என்று மதுவரி ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை