இலங்கை

காற்றாலைத் திட்டத்தை இடமாற்றவேண்டும் அரசு; சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை!

Published

on

காற்றாலைத் திட்டத்தை இடமாற்றவேண்டும் அரசு; சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை!

மன்னார்த்தீவுப்பகுதியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்கோபுரங்களால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று சமூக ஆர்வலர்களும், சூழலியலாளர்களும் கருத்துத் தெரிவித்துள்ள நிலையில், அரசாங்கம் தனது பிடிவாதத்தைக் கைவிட்டு மக்களின் வாழ்வியல் உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
 

இது தொடர்பில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது:-
இலங்கையில் மாற்று வலுசக்தியை வலுப்படுத்தும் முகமாக காற்றாலை மின்கோபுரங்கள். சூரியசக்தி மின்ஆலைகள் எனப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மன்னார்த்தீவு சுற்றிவர கடலைக் கொண்டிருப்பதன் காரணமாக காற்றாலைகளை அமைக்க அரசாங்கம் தனியார் துறைகளுக்கு ஊக்கமளித்துவருகின்றது.

Advertisement

மாற்றுவலுசக்திகள் தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் மிக அதிகப்படியான காற்றாலைகளை நிறுவுவது மக்களின் அன்றாட வாழ்வில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்பதும் உண்மையானது. ஒவ்வொரு காற்றாலை மின்கோபுரத்தை நிறுவும்பொழுதும் எழுபது அடிக்கு மேல் நிலம் தோண்டப்படுகின்றது. இதனால் நிலத்தடி நீர் மாசுபடும்.

அரசாங்கம் இவற்றைப் புரிந்துகொண்டு ஆட் சியாளர்கள் தேர்தல்காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளையும் மன்னார் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் கவனத்தில் எடுத்து ஏனைய காற்றாலை மின்கோபுர அமைப்புகளை வேறு பொருத்தமான இடங்களுக்கு மாற்றுவதே சிறந்ததெனக் கருதுகிறோம் என்றுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version