இலங்கை
சர்வதேச நல்லொழுக்க தினம் யாழில் முன்னெடுப்பு!
சர்வதேச நல்லொழுக்க தினம் யாழில் முன்னெடுப்பு!
சர்வதேச நல்லொழுக்க தினமானது இன்றையதினம் (03) கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில் வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நல்லொழுக்க தினமானது கடைப்பிடிக்கப்பட்டது. அந்தவகையில் சங்கானையில் உள்ள அலுவலகத்தில் இந்நிகழ்வானது முன்னெடுக்கப்பட்டது.
வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் தலைவர் புஸ்பராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விருந்தினர்களாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபவானந்தராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.