பொழுதுபோக்கு

தியேட்டருக்குள் என்ட்ரி ஆன ‘காந்தாரா’; ஆக்ரோஷமாக ஆடிய பெண்: லேட்டஸ்ட் வீடியோ!

Published

on

தியேட்டருக்குள் என்ட்ரி ஆன ‘காந்தாரா’; ஆக்ரோஷமாக ஆடிய பெண்: லேட்டஸ்ட் வீடியோ!

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான காந்தாரா தி லெஜண்ட் சாப்டர் 1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படம் பார்க்க சென்ற, ரசிகர்கள் பலரும், தியேட்டரில், காந்தாரா தெய்வத்தின் சத்தத்துடன் சாமி வந்து ஆடும் காட்சிகள் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.கன்னட சினிமாவில் தற்போது முக்கிய நட்சத்திரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளவர் நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி. நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் வலம் வரும் இவர், கடந்த 2022-ம் ஆண்டு, காந்தாரா என்ற படத்தை இயக்கி நாயகனாக நடித்திருந்தார், நிலத்தின் உரிமைக்காக போராடும் பழங்குடியின மக்களின் வாழ்வியலை, தெய்வத்தின் துணையோடு எதிர்கொள்ளும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் பெரிய வரவேற்பினை பெற்றிருந்தது.முதலில் கன்னடாவில் வெளியாக இந்த படம், அதிக வரவேற்பின் காரணமாக மற்ற மொழிகளில், டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி வசூலில் புதிய சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து உடனடியாக காந்தாரா படத்தின் அடுத்த பாகம் குறித்த அறிவிப்பு வெளியானது. ஆனால் இதன் கதை, காந்தாரா படத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், இந்த கதைக்கு முன்பு நடந்தது என்ன என்பது குறித்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.வழக்கம்போல் ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் ருக்மணி வசந்த் நாயகியாகவும், நகர் ஜெயராம் முக்கிய கேரக்டரிலும் நடித்திருந்தன. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், நேற்று (அக்டோபர் 2) தியேட்டரில் வெளியான காந்தாரா ஏ லெஜண்ட் சாப்டர் 1 திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. ரூ125 கோடியில் இப்படி ஒரு பிரம்மாண்ட படத்தை எடுக்க முடியும் என்று இயக்குனர் ரிஷப் ஷெட்டி நிரூபித்துள்ளதாக பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.Today at Haveri, during the screening of Kantara movie 🙏🕉️#KantaraChapter1 Divine Blockbuster 🔥#RishabShetty#Kantarapic.twitter.com/xyqyHGdr5kஇதனிடையே, காந்தாரா படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்ற ரசிகர்கள் பலரும், காந்தாரா தெய்வம் கொடுக்கும் சத்தத்தை போன்று, சாமி வந்து ஆடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. தமிழில் பக்தி படங்கள் வந்த சமயத்தில் தியேட்டருக்கு படம் பார்க்க வரும் பெண்கள் சாமி வந்து ஆடுவது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது பக்தி படங்கள் குறைவு, மற்றும் தற்போது வெளியாகும் படங்கள் பெரும்பாலும் ஃபேமிலி ரசிகர்களுக்கு ஏற்றதாக இல்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும், காந்தாரா படத்தை .பேமிலி ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.#Kantara @ Anjan Theatre , Magadi Road#KantaraChapter1#RishabShettypic.twitter.com/ouSNc6kIchஅந்த வகையில் தியேட்டரில் ஒரு பெண் சாமி வந்து ஆடுவதும், அவரை இருவர் கையால் பிடித்திருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் அந்த பெண் ஆக்ரோஷமாக இருப்பதை காணலாம். அதேபோல் வெளியில், ஒரு நடுத்தர வயது நபர் காந்தாரா தெய்வத்தின் சத்தத்தை போட்டு, படுத்துக்கொண்டு இருக்கும் காட்சியும் வைரலாகி வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version