தொழில்நுட்பம்
பழைய ஹோம் ஸ்க்ரீன் இல்லை: இன்ஸ்டாவில் ரீல்ஸ் தான் இனி ராஜா- அதிரடி அப்டேட்
பழைய ஹோம் ஸ்க்ரீன் இல்லை: இன்ஸ்டாவில் ரீல்ஸ் தான் இனி ராஜா- அதிரடி அப்டேட்
உலகம் முழுவதும் 3 பில்லியனுக்கும் அதிகமான மாதந்தோறும் ஆக்டிவ் யூசர்களைக் கொண்டுள்ள மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம், தனது வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அதன் ‘ரீல்ஸ்’ மற்றும் ‘DM’ (Direct Messages) அம்சங்கள்தான் என்று அண்மையில் பெருமிதம் கொண்டது. இந்த நிலையில், இப்போது இந்த ஆப்பில் ஒரு பிரம்மாண்ட மாற்றத்தை மெட்டா பரிசோதித்து வருகிறது. அதாவது, இனி இன்ஸ்டாகிராம் ஆப்பைத் திறந்தால், ஆட்டோமேட்டிக்காக ரீல்ஸ் வீடியோக்கள்தான் திரையில் வரும்.இதுகுறித்து இன்ஸ்டாகிராமின் தலைவர் ஆடம் மொஸ்ஸெரி (Adam Mosseri) தனது ‘Threads’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது இந்தியாவில் ‘opt-in’ அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஒரு ‘லிமிடெட் டெஸ்ட்’ (Limited Test) என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மாற்றம் என்ன?ரீல்ஸ்-தான் பிரதானம்: யூசர்கள் ஆப்பைத் திறந்தவுடன், வழக்கமான போஸ்ட்டுகளுக்குப் பதிலாக ரீல்ஸ் ஃபீடிற்குச் செல்வார்கள்.ஸ்க்ரோல் செய்தால் ஃபுல் ஸ்கிரீன் (Full-Screen): ஹோம் ஸ்கிரீனில் இருந்து கீழே ஸ்க்ரோல் செய்தால், அது உடனே ஃபுல் ஸ்கிரீன் ரீல்ஸ் லேஅவுட்டிற்கு மாறும்.ஸ்டோரீஸ் (Stories) அப்படியே இருக்கும்: ஆப்பின் மேலே ஸ்டோரீஸ் பிரிவு வழக்கம்போல் இருக்கும்.DM-க்கு சுலப வழி: இந்த சோதனையில் பங்கேற்பவர்களுக்கு, நேவிகேஷன் பாரில் (கீழே உள்ள பட்டி) இருந்தே DM-களை (Direct Messages) விரைவாக அணுகும் வசதி கிடைக்கும்.புதிய ‘Following’ டேப்: ஒரு புதிய “Following” டேப் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் ‘Latest’ என்ற வசதியும் உண்டு. இதன் மூலம் நீங்கள் பின்தொடரும் அக்கவுன்ட்களின் சமீபத்திய போஸ்ட்டுகளைத் தொடர் வரிசையில் (Chronological Order) காண முடியும்.சமீபத்தில் ஐபாடுக்கான இன்ஸ்டாகிராம் ஆப்பிலும் ரீல்ஸ் பிரிவே டீஃபால்ட்டாக திறக்கப்பட்டது. அதே பாணியைத்தான் இந்த சோதனையும் பின்தொடர்கிறது. மேலும், பயனர்கள் இனிமேல் ரீல்ஸ், DM மற்றும் பிற டேப்களுக்கு இடையில் சுலபமாக ஸ்வைப் செய்யும் வசதியையும் விரைவில் கொண்டு வர மெட்டா திட்டமிட்டுள்ளது.ஷார்ட்-ஃபார்ம் வீடியோக்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்த ரீல்ஸ்-சார்ந்த மாற்றம் இன்ஸ்டாகிராமின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான முக்கிய படியாகப் பார்க்கப்படுகிறது!இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்