இந்தியா

புதுவையில் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்ட புல்லட் திடீரென தீப்பிடித்து எரிந்தது; அச்சத்தில் சிதறி ஓடிய மக்கள்

Published

on

புதுவையில் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்ட புல்லட் திடீரென தீப்பிடித்து எரிந்தது; அச்சத்தில் சிதறி ஓடிய மக்கள்

புதுச்சேரியில் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புல்லட் திடீரென தீப்பற்றி எறிந்ததால் வாகன ஓட்டிகள் நாலாபுறமும் சிதறி ஓடியதால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி முருகா தியேட்டர் சிக்னல் அருகே புல்லட் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் இன்று காலை ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஓட்டிச் சென்ற புல்லட்டின் என்ஜின் பகுதியில் இருந்து லேசாக புகை வந்துள்ளது.உடனே வாகனத்தை நிறுத்திவிட்டு என்ன என்று பார்க்க கீழே இறங்கி உள்ளார், ஆனால் அதற்குள் இருசக்கர வாகனம் எரியத் தொடங்கியது மேலும் அவர் சுதாரித்துக் கொள்வதற்குள் காற்று பலமாக வீசியதால் தீ மள மளவென பரவி வாகனம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் நாலாபுறமும் சிதறி அடித்து ஓடியதால் பரபரப்பு நிலவியது.சாலை ஓரம் நிறுத்தப்பட்டு இருந்து வாகனம் எவ்வாறு தீப்பற்றி எறிந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version