பொழுதுபோக்கு

மும்பையில் யூஜி, லண்டனில் மாஸ்டர்; கமல்ஹாசனின் ரீல் மகள் இப்போ ஹிட் படத்தின் 3-வது பாகத்தில் ரொம்ப பிஸி நடிகை!

Published

on

மும்பையில் யூஜி, லண்டனில் மாஸ்டர்; கமல்ஹாசனின் ரீல் மகள் இப்போ ஹிட் படத்தின் 3-வது பாகத்தில் ரொம்ப பிஸி நடிகை!

கடந்த 2013-ஆம் ஆண்டு இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘த்ரிஷ்யம்’. இந்த படத்தில் மோகன்லால், மீனா, நிவேதா தாமஸ், எஸ்தர் அனில் உட்பட பலர் நடித்திருந்தனர். தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக நடிகர் மோகன்லால் ரசிகயம் ஒன்றை மறைக்கிறார்.இதனால் அவர்கள் குடும்பத்திற்கு வரும் பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. இப்படம் மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து. தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் வெளியானது.இதில், கமல்ஹாசன், கெளதமி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திலும் நடிகை எஸ்தர் அனில் தனது கதாபாத்திரத்தை தானே ஏற்று நடித்திருந்தார். தொடர்ந்து, மலையாளத்தில் ‘த்ரிஷ்யம் 2’ திரைப்படம் வெளியானது. இதிலும், நடிகை எஸ்தர் அனில் நடித்திருந்தார்.தற்போது ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படம் தொடங்கவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. கடந்த இரண்டு பாகங்கள் போல் இல்லாமல் ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படம் சற்று வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. முந்தைய இரண்டு பாகங்களையும் மூன்றாம் பாகம் மிஞ்சிவிடும் என்று இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும், டப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு, குழந்தைகள் வளர்ந்துவிட்டதால், குடும்பத்திற்குள் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும் என்றும், இது கதைக்கு புதிய பரிமாணங்களைச் சேர்க்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.’த்ரிஷ்யம்’ மூன்றாம் பாகத்திலும் நடிகை எஸ்தர் அனில் நடிக்கவுள்ளார். இவர், இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான ‘மின்மினி’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.ஒரு பக்கம் படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை எஸ்தர் அனில் மறுபக்கம் தனது படிப்பையும் தொடர்ந்து வருகிறார். லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் கல்லூரியில் சுற்றுபுற சூழல் குறித்த முதுகலை படப்படிப்பில் படிப்பதற்காக சேர்ந்துள்ளார். தற்போது வெற்றிகரமாக தனது முதுகலை பட்டப்படிப்பை நிறைவு செய்த நடிகை எஸ்தர் அனில் அதுகுறித்து மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version