சினிமா

யாரும் எதிர்பாராத திருப்பம்.. ரசிகர்களால் அதிகம் தேடப்பட்டவர்களில் அஜித், விஜய் இல்லயா.?

Published

on

யாரும் எதிர்பாராத திருப்பம்.. ரசிகர்களால் அதிகம் தேடப்பட்டவர்களில் அஜித், விஜய் இல்லயா.?

இந்திய சினிமா என்பது வெறும் திரையில் வசூலிக்கும் திரைப்படங்களை மட்டும் குறிக்கவில்லை. அது ஒரு பண்பாட்டு சக்தி, ஒரு தொழில்துறை, மற்றும் இது மக்களிடம் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் பிரதிபலிக்கிறது. இந்த தாக்கம் இப்போது ஒரு புதிய அளவுகோலாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய தேடல்கள் மூலமாக மதிப்பீடு செய்யப்படுகிறது.அந்தவகையில், கடந்த 10 வருடங்களில் இணையத்தில் மக்கள் அதிகம் தேடிய நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பட்டியல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த பட்டியல் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில், பிரபல நடிகர்கள், சூப்பர் ஸ்டார்கள் அனைவர்களதும் எதிர்பார்ப்புகளை மீறிய வகையில் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்.அவரைத் தொடர்ந்து, ஷாருக்கான், ஐஸ்வர்யா ராஜ், அமீர்கான், சல்மான்கான் மற்றும் அக்சய் குமார் ஆகியோர்  அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றார். இந்த பட்டியலில் தமிழ் சினிமா மற்றும் பிற தென்னிந்திய நடிகர்கள் குறைவாகவே உள்ளனர். ஆனால், சமந்தா அதில் 13-வது இடத்தையும், தமன்னா 6-வது இடத்தையும் , நயன்தாரா 18-வது இடத்தையும் மற்றும் பிரபாஸ் 29-வது இடத்தையும் பிடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version