சினிமா

விஜய் இன்னும் பக்குவப்படல… கரூர் சம்பவத்தால் தளபதியை கேள்வியெழுப்பிய எஸ்.வி. சேகர்.!

Published

on

விஜய் இன்னும் பக்குவப்படல… கரூர் சம்பவத்தால் தளபதியை கேள்வியெழுப்பிய எஸ்.வி. சேகர்.!

தமிழக அரசியலில் புதிய முன்னேற்றம் காணப்படுவதற்குள், புதிய சர்ச்சைகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகரான விஜய் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய பிறகு, அவரை சுற்றி ஏற்படும் நிகழ்வுகள் மட்டுமல்லாமல், அவற்றில் ஏற்படும் தவறுகளும் பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோரிடையே விவாதத்துக்குரியவையாக மாறியுள்ளன.இந்நிலையில், சமீபத்தில் கரூரில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பங்களை கையாளத் தவறினார் என நடிகர் எஸ்.வி. சேகர் முன்வைத்துள்ளார். இவர் அளித்த பரபரப்பான பேட்டி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.தற்போது தமிழக அரசியலில் புதிய ஹீரோவாக கருதப்படும் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். கடந்த வாரம் அவர் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்வில், திட்டமிடல் குறைவால் மக்கள் கூட்டம் கட்டுப்பாட்டை இழந்தது. இதன் விளைவாக ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் பதற்றமான சூழல் காரணமாக பொதுமக்கள் பலர் உயிரிழந்ததுடன் காயமும் அடைந்துகொண்டனர்.இந்தச் சூழ்நிலையை சுட்டிக்காட்டியுள்ள எஸ்.வி. சேகர், “அடிப்படை தவறு என்னவென்றால், தன்னை பார்க்க வந்த கூட்டத்தை கட்டுப்படுத்த தவறிய தவறு விஜய் மேல இருக்கு. அவங்க விஜய் வருவார்னு காலையில 10 மணிக்கே காத்திருந்தாங்க. ஆனா, அவர் 7 மணி நேரம் தாமதமாக மாலை 5 மணிக்கு தான் வந்தார். இதுவே ஒரு பெரிய பொறுப்பற்ற செயலாகும்.”அப்பாவி மக்களின் உயிர் பறிபோன செய்தி சமூகத்தையே உலுக்கியுள்ளது. விஜயை நேரில் பார்க்கும் ஆர்வத்தில் வந்த மக்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத நிலையில் தள்ளுமுள்ளில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால்தான் ஒருசிலர் மரணமடைந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.“விஜயை பார்க்கணும் என்று ஆசையில அப்பாவி சனங்கள் இறந்திட்டாங்க. சினிமா நடிகன் பின்னாடி எதுக்கு போறீங்க? உனக்கு நல்லது செய்றவன் பின்னாடி போ.. அத்துடன் விஜய் இன்னும் பக்குவப்படல..” என்கிறார் எஸ்.வி. சேகர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version