இலங்கை
விஜேராம மாவத்தை வீட்டை கையளிக்காதுள்ள மஹிந்த; அமைச்சர் நளிந்த தெரிவிப்பு!
விஜேராம மாவத்தை வீட்டை கையளிக்காதுள்ள மஹிந்த; அமைச்சர் நளிந்த தெரிவிப்பு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தை இன்னும் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி விஜேராம இல்லத்தைவிட்டு வெளியேறி மூன்று வாரங்கள் கடந்துவிட்டன. எனினும் அதிகாரப் பூர்வமாக பொதுநிர்வாக அமைச்சகத்திடம் வீட்டை ஒப்படைக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, முன்னர் அமைச்சர்கள் வசித்த வீடுகள் மூடப்பட்டுக் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியும், இந்த விடயத்தில் அரசாங்கம் இன்னும் உறுதியான முடிவை எட்டவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் அந்த வீடுகள் நாளுக்கு நாள் பாழடைந்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.