சினிமா

30 ஆண்டு திருமண வாழ்க்கை..அடித்து துன்புறுத்திய கணவர்!! ரஜினி, கமல் பட நடிகையின் மறுப்பக்கம்..

Published

on

30 ஆண்டு திருமண வாழ்க்கை..அடித்து துன்புறுத்திய கணவர்!! ரஜினி, கமல் பட நடிகையின் மறுப்பக்கம்..

பாலிவுட் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்து வந்தவர் நடிகை ரதி அக்னிகோத்ரி. ஸ்ரீதேவிக்கு அடுத்து பலரால் ஈர்க்கப்பட்டு வந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார். தமிழில் பாலிவுட் நடிகைகளுடன் ஆரம்பத்தில் ரஜினி, கமல் நடித்து ஹிட் கொடுத்து வந்தனர். அப்படி இயக்குனர் பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவரும் ரதி அக்னிகோத்ரியும் தான்.பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகைகள் சினிமாவில் தோற்றுப்போகமாட்டார்கள் என்று கூறுவார்கள். அப்படி ராதிகா, ரேவதி, ரஞ்சிதா, ராதா, ரஞ்சனி, ராஜ்யஸ்ரீ போன்ற R நடிகைகளின் வரிசையில் இணைந்தவர் தான் ரதி. பாரதி ராஜாவின் புதிய வார்ப்புகள் படத்தில் பாக்யராஜிற்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகினார். 1979ல் சுமார் 5 படங்களில் தமிழில் நடித்தார் ரதி.சுத்தமாக தமிழ் பேசத்தெரியாத நடிகையான ரதியுடன் கமல், ரஜினி நடிக்க கஷ்டப்பட்டார்களாம். ரஜினியுட்ன் மூன்று படங்கள், கமலுடன் ’ஏக் துஜே கேலியே’ என்ற பாலிவுட் படம் என்று சூப்பர் டூப்பட் படமாக அமைந்ததற்கு ரதி அக்னிகோத்ரியும் முக்கிய காரணம். நடிகர் பிரசாந்தின் மஞ்னு படத்தில் கதாநாயகிக்கு அம்மாவாக நடித்தது தான் அவர் நடித்த கடைசி தமிழ் படம்.இதன்பின், 1985ல் தொழிலதிபர் அனில் விர்வானி என்பவரை திருமணம் செய்து படிப்படியாக சினிமாவில் இருந்து விலக தொடங்கினார். அவரது திருமண வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. பெற்றோர்களை மீறி திருமணம் செய்த ரதி, ஒரே ஆண்டில் குடும்ப வன்முறைகளை எதிர்கொண்டார்.கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் தன்னை காப்பாற்றுமாறும் வீட்டை சுற்றி ஓடியாதாகவும் பேட்டியொன்றில் ரதி கூறியிருக்கிறார். இந்த தம்பதிகளுகு 1986ல் மகன் பிறந்தநிலையில் இருவருக்கான உறவு சுமூகமாக இல்லாமல் சகித்துக்கொண்டு 2015ல் 30 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்து பிரிந்தார்.எனக்கு 54 வயதாகிவிட்டது என்பதை உணர்ந்தேன். இனியும் என்னால் இந்த அடிகளை தாங்கும் சக்தி இல்லை. இன்னும் சகித்தால் இறந்துவிடுவேன் என்று கூறியிருந்தார். தற்போது 60 வயதாகியும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version