சினிமா

33 வயசாச்சு கல்யாணம் எப்போ!! கூலி பட வில்லி ரச்சிதா ராம் ரியாக்ஷன் இதான்..

Published

on

33 வயசாச்சு கல்யாணம் எப்போ!! கூலி பட வில்லி ரச்சிதா ராம் ரியாக்ஷன் இதான்..

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களில் நடிப்பில் கூலி திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது.இப்படத்தில் வில்லி ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை ரச்சிதா ராம். தன்னுடைய சிறப்பான நடிப்பால் அனைவருக்கு அதிர்ச்சி கொடுத்த ரச்சிதா ராம் அக்டோபர் 3 ஆம்தேதி தன்னுடைய 33வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.இந்நிலையில் ரச்சிதா ராமிடம் 33 வயதாகிவிட்டது எப்போது திருமணம் செய்யப்போகிறீர்கள் என்ற கேள்விக்கு தன்னுடைய ரியாக்ஷனை கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உங்கள் அன்பு, ஆதரவு, அக்கறைக்கு நான் கடைமைப்பட்டுள்ளேன்.ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அக்டோபர் 3ன் அன்று என் வீட்டின் அருகே இந்த சிறந்த நாளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள காத்திருக்கிறேன், இது பிறந்தநாள் கொண்டாட்டம் மட்டுமில்லை, நம் உறவின் கொண்ட்டாட்டம், உங்கள் அன்பின் ரச்சு என்று எழுதி அந்த பதிவில் பகிர்ந்துள்ளார்.இதன்பின் இன்று அக்டோபர் 3, அவர் பிறந்தநாளுக்கு அவர் வீட்டின் முன் கூட்டம் குவிந்து, திருமணம் குறித்த கேள்வி எழுப்பட்டது. இந்த காலத்திலும் இப்படியொரு பெண்ணா என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் படியான பதிலை ரச்சிதா கூறியிருக்கிறார்.நிச்சயம் திருமணம் செய்வேன், பெற்றோரிடம் கூறியுள்ளேன், அவர்களும் மாப்பிள்ளை பார்க்கத்தொடங்கிவிட்டனர். யார் என்றாலும் சரி, கடவுள் யாரை அனுப்புகிறாரோ அவரை ஏற்றுக்கொள்வேன் என்று கூறியிருக்கிறார் ரச்சிதா ராம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version