சினிமா

PHONE-ல அவன் இன்னும் உயிரோட இருக்க மாதிரி பேசிட்டு இருக்காங்க.! ROBO அண்ணன் பேட்டி

Published

on

PHONE-ல அவன் இன்னும் உயிரோட இருக்க மாதிரி பேசிட்டு இருக்காங்க.! ROBO அண்ணன் பேட்டி

பிரபல காமெடி நடிகரான ரோபோ சங்கர் கடந்த மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு ஏற்கனவே மஞ்சள் காமாலை நோய் இருந்த நிலையில்,  திடீரென ஏற்பட்ட  உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.இந்த நிலையில், ரோபோ சங்கரின் உயிரிழப்பு பற்றியும், அவருடைய மனைவி பற்றியும் உருக்கமாக பேட்டி கொடுத்துள்ளார் ரோபோ சங்கரின் அண்ணா   சிவகாசி சிவா. அதில் அவர் கூறுகையில் ,  ரோபோ சங்கரின் மனைவி, தம்பி பொண்ணு இப்பவும் ரோபோ சங்கர் மண்ணுலகை விட்டுபிரிந்து போனதா அவங்க மைண்ட்ல வைக்கவே இல்லை. அவன் லோங் டைம் ஷூட்டிங் போய் இருக்கான்.. இன்னைக்கு வருவான்.. நாளைக்கு வருவான்.. என்பது போல இருக்காங்க..  அவன் இறந்து  இரண்டாவது நாள் காலையில் சங்கர் கூட ட்ராவல் பண்ணிய ஒருவருக்கு போன் பண்ணிய பிரியங்கா, சங்கர சாப்பிட சொல்லு, மாத்திரை குடிக்க சொல்லு, கவனமா இருக்க சொல்லு என்று பேசியுள்ளார். இத கேட்டு எனக்கே ஒரு நிமிடம்  திகைத்து போயிட்டு.. நான் வீட்டுக்கு போன போதும்  அழுது புலம்பி ஒப்பாரி வைக்கவில்லை.  நிகழ் நிலையில்  என்ன நடக்குமோ  அதுக்கு ஏற்ற மாதிரி தன்னை தயார்படுத்தி கொண்டு வாழ்ந்துட்டு இருக்காங்க..உள்ளுணர்வில் அவன் இல்லை என தெரிஞ்சு போயிட்டு.. இயற்கை கூட ஒத்து போற மாதிரி வாழ்ந்துட்டு இருக்காங்க என பேசியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version